(Source: ECI/ABP News/ABP Majha)
Petrol Diesel Price : பெட்ரோல் விலை அடுத்தடுத்து உயர்வு... மீண்டும் சதம் கடக்க வாய்ப்பு!
Petrol Diesel Price Today Chennai: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ. 99.80க்கு விற்பனையாகிறது
Petrol Diesel Price Today: சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை மீண்டும் உயர்வு அடைந்துள்ளது. இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசு அதிகரித்து ரூ. 99.80க்கு விற்பனையாகிறது. அதே போன்று டீசல் விலை 28 காசு அதிகரித்து ரூ. 95.02க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களில் வரலாற்று காணாத அளவு பெட்ரோல்/டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது.
அரசியலைப்பிலுள்ள ஜிஎஸ்டியின் விளக்கத்தின்படி மனிதன் உட்கொள்ளும் மதுவை GSTயிலிருந்து வெளியேற்றிவிட்டது. கச்சா பெட்ரோல், மோட்டார் எரிபொருள் (பெட்ரோல்), அதி வேசு டீசல், இயற்கை எரிவாயு மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகிய ஐந்து பெட்ரோலியப் பொருட்களை GSTக்கு வெளியில் தற்காலிகமாக வைத்துள்ளது. எந்த தேதியிலிருந்து அவை GSTக்குள் சேர்க்க வேண்டும் என்பதை ஜிஎஸ்டி மன்றம் முடிவு செய்யும்.
மத்திய அரசின் தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணய கொள்கை மற்றும் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. வரிகள் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு அடுக்கு வரிவிகித அமைப்பாக ஏற்கப்பட்டது. எனவே, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல்/டீசல் எரிபொருள் மீது அதிகபட்சமாக 28% வரிவிதம் மட்டுமே போடப்படும். எனவே, சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு உட்பட்டு, பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக 70 ரூபாயாக குறைய நேரிடம்.
முன்னதாக நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் மற்றும் டிசல் ஆகிய இரண்டையும் கொண்டு வர வேண்டாம் என்று வலியுறுத்தின. இதன் காரணமாக, தற்போதைக்கு ஜிஎஸ்டியில் கொண்டு வரும் எண்ணமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், " மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத, மத்திய அரசால் விதிக்கப்படும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இத்தகையை போக்கை மத்திய அரசு குறைத்துக் கொண்டால் தான், ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது தொடர்பான விவாதம் ஆக்கப்பூர்வமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், வாசிக்க:
Petrol under GST: பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி: அன்று ஆதரித்த பிடிஆர்... இன்று எதிர்ப்பது ஏன்?