சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்து ரூ.1,13,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

ஆகஸ்ட் 1-ம் தேதி கிராமிற்கு 210 ரூபாய் குறைந்து 14,175 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,13,400 ரூபாய்க்கும் விற்பனை.

ஆகஸ்ட் 2-ம் தேதி  கிராம் ஒன்றுக்கு 225 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.

Continues below advertisement

ஆகஸ்ட் 3-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 290 ரூபாய் அதிகரித்து 14,240 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து 1,13,920 ரூபாய்க்கு விற்பனை

ஆகஸ்ட் 4-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 120 அதிகரித்து 14360 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 1,14,880 ரூபாய்க்கு விற்பனை.

 

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் இறுதியிலும், இந்த வாரம் தொடக்கத்திலும் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்கள் திடீரென அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் குறைந்து 14,190 ரூபாய்க்கும், சவரனுக்கு 1360 ரூபாய் குறைந்து 1,13,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் கடைசி நாளில் தங்கம் விலை குறைந்துள்ளது நடுத்தர குடும்பத்தினரை கொஞ்சம் ஆறுதல் படுத்தியுள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் கிலோ 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.