தங்கம் விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் சரசரவென குறைந்து வந்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.4,000 அளவுக்கு தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், சனிக்கிழமை(அக்டோபர் 24) அன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560 விற்பனை செய்யப்பட்டது. 

Continues below advertisement

தங்கம் விலை

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. ஒரு கிராம் ரூ.13,085க்கும், ஒரு சவரன் ரூ.1,04,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!

Continues below advertisement

நெருக்கும் தீபாவளி

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 26) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,04,680ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,085ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.14,275ஆக விற்பனையாகிறது.  சவரன் ரூ.114,200ஆக விற்பனையாகிறது. நகை விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தீபாவளி நெருக்கும் நிலையில் மீண்டும் தங்கம் உயரத்தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தமா? நிறுவனம் கொடுத்த பரபரப்பு விளக்கம்!

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. ஒரு கிராம் விலை ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.220,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.