தங்கத்தில் எளிதில் கண்டறியமுடியாத ரீனியம் எனும் ரசாயனப்பொடி கலக்கப்படுவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

தங்கத்தையும் விட்டுவைக்கல! புதுவித ரசாயனம் கலப்பாமே!

ஒரு சில தங்கத்தில் ரீனியம் எனும் ரசாயனப்பொடி கலக்கப்படுவதாகவும், இக்கலப்படத்தின் மூலம் தயாரிக்கப்படும் நகைகளில் மாற்றம் ஏதும் தென்படாது எனவும் கூறப்படுகிறது. இப்புதுவித கலப்படமுறை குறித்து பிரபல ஹிந்தி நாளேடு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

வழக்கமான சோதனை முறைகளால் தங்கத்தில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை கண்டறிய இயலாது எனவும்,கலப்படம் செய்து தயாரிக்கப்பட்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இக்கலப்படத்திற்கு காரணமான ரீனியம் எனும் ரசாயனப்பொடி சீனாவில் இருந்து வரவழைக்கப்படுவதாகவும், 100 கிராம் எடையுள்ள இப்பொடி லட்சக்கணக்கான ரூபாய்வரை விற்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

ரசாயனப்பொடி அதிகம், தங்கம் குறைவா?

இக்கலப்பட விவகாரம் வெளியான பிறகு ரசாயனக்கலப்புடன் தயாரிக்கப்படும் நகைகளில் எத்தனை சதவீதம் தங்கம் உள்ளது, நகைகளில் ரசாயனம் அதிகமா அல்லது தங்கம் அதிகமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுவது இயல்பானதுதான். இவ்வகை கலப்பட நகைகள் ராஜஸ்தான் மாநிலப் பகுதிகளில் விற்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவற்றுள் 75 %-க்கும் குறைவான அளவில்தான் தூய்மையான தங்கம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் ரீனியம் ரசாயனம் இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் பெருநகரங்கள் வரை பரவியுள்ளதாக பேரதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகி உள்ள நிலையில் நம்மிடையே உள்ள தங்கம் தூய்மையானதா அல்லது கலப்படமானதா என்ற எண்ணம் எழும் அளவிற்கு தங்கத்தின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தவும், வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ள ஐயத்தை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.