Ready to move Property: குடியேற தயார் நிலையில் உள்ள வீடு அல்லது ஃபிளாட் வாங்க திட்டமா? கவனிக்கவேண்டிய விஷயங்கள் இவைதான்..!

Ready to move Property: குடியேற தயார் நிலையில் உள்ள வீடு அல்லது ஃபிளாட் வாங்குவோர்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Ready to move Property: குடியேற தயார் நிலையில் உள்ள வீடு அல்லது ஃபிளாட் வாங்குவோர்களுக்கான, 5 ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

குடியேற தயார் நிலையில் இருக்கும் வீடு/ஃபிளாட்:

ரியல் எஸ்டேட் சந்தையில், வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்களின் ஒரு பிரிவினர் கட்டுமான பணி நடைபெற்று வரும் சொத்துக்களை விட, குடியேற தயாராக உள்ள சொத்துக்களை வாங்க விரும்புகிறார்கள். இந்த விருப்பம் முதன்மையாக இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது.

  • வாங்குபவர் உடனடியாக சொத்தைப் பயன்படுத்தலாம் அல்லது வாடகைக்கு விட்டு மாதாந்திர வருமானம் பெறலாம்.
  • குடியேறுவதற்கு தயாராக இருக்கும் சொத்துக்களை சொந்தமாக வாங்குபவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை அல்லது திட்ட தாமதங்களைச் சமாளிக்க வேண்டியதில்லை.

அதேநேரம் குடியேற தயாராக உள்ள சொத்தை வாங்க திட்டமிடுபவர்கள், சில காரணிகளை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். அவற்றை மதிப்பிடத் தவறினால், எதிர்காலத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

சரிபார்க்க வேண்டிய 5 அம்சங்கள்:

1. உரிமையாளரை சரிபாருங்கள்:

சொத்தின் உரிமையாளர் குறித்து உறுதி செய்து கொள்வது என்பது மிக அவசியமானது. ஒரு சொத்தின் உரிமை வார்த்தைகளால் உறுதியாவதில்லை.  இது அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் சொத்தை வாங்குகிறீர்கள் என்றால், முதலில் உரிமையாளரின் விவரங்களை வருவாய் அலுவலகத்தில் சரிபார்த்து, சொத்தை விற்கும் நபரே உண்மையான உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்தவும். ஒரு சொத்தை உரிமையாளரைத் தவிர வேறு சிலர் விற்பனை செய்வது போன்ற மோசடிகளும் நிகழ்ந்து வருகின்றன.

2. சொத்து வயது மற்றும் தரம்

உரிமையாளர் விவரங்களை சரிபார்த்த பிறகு, நீங்கள் வாங்கத் திட்டமிடும் சொத்தின் வயது மற்றும் கட்டுமானத் தரத்தை மதிப்பிட வேண்டும். பொதுவாக, நல்ல கட்டுமானத் தரம் கொண்ட சொத்துகளின் ஆயுட்காலம் சுமார் 70 முதல் 80 ஆண்டுகள் வரை இருக்கும். பழைய சொத்துக்களின் ஆயுட்காலம் புதிதாக கட்டப்பட்டதை விட குறைவாக இருக்கும். உள்ளூர் பிராபர்டி டீலர்களிடமிருந்து தரம் பற்றிய தகவலை நீங்கள் சேகரிக்கலாம் அல்லது ஸ்ட்ரக்ட்சரல் பொறியாளரை அணுகலாம்.

3. வருமான நிலை மற்றும் வாழ்க்கை முறை

நீங்கள் வாங்கத் திட்டமிடும் சொத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களின் வருமான அளவை அறிந்து கொள்வது அவசியம். சொத்துக்களை வருமான நிலைகளால் வகைப்படுத்தலாம். அதன்படி ஒரு அறையை கொண்ட சொத்துகள் பொதுவாக பொது மக்கள் அல்லது ஸ்டுடியோ பயனர்களுக்கும், இரண்டு அறைகள் குறைந்த வருமானம் கொண்ட தரப்பினருக்கும், மூன்று அறைகள் நடுத்தர வருமானம் மற்றும் நான்கு அறைகள் அதிக வருமானம் கொண்ட தரப்பினருக்கானதாகும். ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட ஒரு பகுதியில் நீங்கள் மூன்று அல்லது நான்கு அறைகள் கொண்ட சொத்தை வாங்கினால், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வாழ்க்கைத் தரத்தை நீங்கள் காணலாம்.

4. அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்:

சொத்தின் இருப்பிடத்தில் பால், ரொட்டி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எளிதாக அணுகுவதை உறுதிசெய்யுங்கள்.  இத்தகைய வசதிகள் இல்லாவிட்டால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்.

குடியிருப்பாளர்கள் நலச் சங்கம்:

நீங்கள் சொத்தை வாங்கும் இடத்தில் குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் (RWA) நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். RWA இருந்தால், பகுதியின் பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி விவாதிக்க அதன் உறுப்பினர்களைச் சந்திக்கலாம். பொது இடங்கள், பசுமை மற்றும் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை பராமரிப்பதில் குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola