Paytm: பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பான சிஏஐடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 


பேடிஎம் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட ஆர்பிஐ:


வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்துவது, டிக்கெட் புக் செய்வது, ரீசார்ஜ்கள் என அனைத்திற்குமே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு விகிக்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.


இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி மீது எழுந்த புகார்களை தொடர்ந்து ரிசர்வ் வங்கி அதனை முடக்கியது.


இதில் பேடிஎம் பேமன்ட் வங்கியில் விதிகள் சில மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, பேடிஎம் பேமன்ட் வங்கியில்  பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்துவதற்கு வரும் 29ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.


அனைத்து வர்த்தகர்களுக்கு பரந்த உத்தரவுகிறது


இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு, இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பான சிஏஐடி (Confederation of All India Traders) முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ”சிறு வணிகர்கள், விற்பனையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பேடிஎம் மூலம் பணப் பரிவர்ததனை மேற்கொள்கின்றனர்.


பேடிஎம் நிறுவனத்தில் இந்திய ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால், அனைத்து வணிகர்களுக்கும் நிதி இடையூறு ஏற்படக்கூடும். இதனால், அனைத்து வணிகர்களும் பேடிஎம் மூலம் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, வேறு ஒரு பணப் பரிவர்த்தனை செயலியை பயன்படுத்துங்கள்.  


வணிகர்கள் தங்கள் நிதியை பாதுகாக்கவும், தடையின்றி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேறுறொரு செயலியை பயன்படுத்துங்கள். பேடிஎம் ஆப்பை பயன்படுத்த வேண்டாம்" என்று சிஏஐடி கேட்டுக் கொண்டுள்ளது. 


கட்டுப்பாடுகள் என்னென்ன?


வாலட் உள்பட எந்த பண பரிமாற்றங்களும் அனுமதிக்கப்படாது. ஆனால், பேடிஎம் கணக்குகளில் ஏற்கனவே இருக்கும் பணத்தை திரும்ப எடுக்கவும் பயன்படுத்தவும் எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35A மற்றும் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி Paytm Payments வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் மேலும் டெபாசிட் செய்யவோ, பணப் பரிமாற்றம் செய்யவோ, டாப் அப் செய்யவோ அனுமதிக்கப்படாது .


ஆனால், சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருக்கும் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் UPI வசதியை பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.