மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது பற்றி இங்கே காணலாம்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2025:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு ஜனவரி 31-ம் முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி, 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். எட்டாவது முறையாக மக்களவையில் பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய இருக்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ம் தேதி வரை முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும். அடுத்து மார்ச் 10ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதி முடிவடையும்.
என்விரோகேர் அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஹ்ரிஷித் பாந்த்ரி, பரிந்துரைகளைப் பற்றி விரிவாகப் பேசுகையில், “நீண்ட காலமாக, இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத் துறையை ஆழமாக நம்பியிருக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு உதவுவது மட்டுமின்றி எண்ணற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் ஒன்றாக இருக்கிறது. விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் வளர்ச்சியை பாதிக்காத வகையில், துறையை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு நேரடியாக வருமானம் அளிக்கும் PM-கிசான் சம்மன் நிதி யோஜனா போன்ற திட்டங்கள் அல்லது உரங்களை சீரான முறையில் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்ட மண் ஆரோக்கிய அட்டைத் திட்டம் போன்ற திட்டங்கள் அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
Doodhvale Farms இன் இணை நிறுவனர் மற்றும் CEO, அமன் ஜே ஜெயின், " வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும் என்பது நோக்கமாக இருக்கிறது. பால்பண்ணை மற்றும் கோழிப்பண்ணை தொழில்களில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான நிதிச் சலுகைகள் வகுக்கப்படும் என்பது எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும். உணவுப் பதப்படுத்தும் வசதிகள், குளிர்சாதன கிடங்குகள் மற்றும் விநியோகிக்கும் முறையில் மேம்பாடு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பால் துறையில் நிதியுதவி அதிகரிக்கப்பட வேண்டும். விளைச்சலை அதிகரிக்கவும், மாடுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்க வேண்டும். கோழிப்பண்ணையாளர்கள் தங்கள் பறவைகளுக்கு நோய் வராமல் தடுக்க உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், கூண்டு இல்லாத விவசாயம் போன்ற நிலையான விவசாய முறைகளைத் தழுவியதற்கான போனஸும் வரும் என்று கருதுகின்றனர்,” என்று அவர் கருத்து தெரிவித்தார்.