ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • வணிகம்
  • பட்ஜெட் 2024
  • Budget 2024: பட்ஜெட் என்றால் என்ன? எதற்கு தெரிந்துகொள்ள வேண்டும்? .!

Budget 2024: பட்ஜெட் என்றால் என்ன? எதற்கு தெரிந்துகொள்ள வேண்டும்? .!

Ad
செல்வகுமார் Updated at: 21 Jul 2024 08:05 PM (IST)

Union Budget 2024: பட்ஜெட் என்றால் என்ன என்பது குறித்து எளிமையாகவும், அதை தெரிந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் தெரிந்து கொள்வோம்.

Budget 2024: பட்ஜெட் என்றால் என்ன? எதற்கு தெரிந்துகொள்ள வேண்டும்? .!

பட்ஜெட்

NEXT PREV


நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் குறித்து தெரிந்து கொள்வோம். 


பட்ஜெட் என்றால் என்ன?


பலருக்கும் பட்ஜெட் என்ன என்றால் தெரிந்திருக்கும், சிலருக்கு பட்ஜெட் பற்றிய குழப்பங்கள் இருக்கும். மேலும் மாணவர்கள் சிலருக்கு பட்ஜெட் பற்றிய கருத்துகளும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஆகையால், சிலருக்கு புரிந்து கொள்ள ஏதுவாக, எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த தகவல் அளிக்கப்படுகிறது. 


உதாரணத்திற்கு, உங்கள் வீட்டில் திட்டமிடுவீர்கள், தந்தை அல்லது தாய் வேலைக்குச் சென்றால், அவர்களின் வருவாயை பொறுத்து, நமது செலவுகளை திட்டமிடுவோம்.  ரூ. 50, 000 வருவாய் வருகிறது என்றால், ரூ.10,000 வீட்டு வாடகை கட்ட வேண்டும் , 10,000 வீட்டுச் செலவுகளுக்காக, ரூ.10,000 குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு, ரூ.10,000 பயண செலவு, ரூ. 10,000 சேமிப்புக்காக என திட்டமிடுவோம்.


சில சமயங்களில் திடீரென, ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும் பட்சத்தில், அதற்கு செலவு ஏற்பட்டால் என்ன செய்வது? எதிர்பாராத செலவு , வருமானத்தைவிட செலவு அதிகமாகும் போது, என்ன செய்ய முடியும், வேறு வழியில்லை கடன்தான் வாங்க வேண்டும்.




இதேபோன்றுதான், ஒரு நாட்டுக்கு பண திட்டமிடலை மேற்கொள்வதுதான் பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.  அடுத்த ஒரு ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் வரும் , அதில் இருந்த எந்த துறைக்கு எவ்வளவு செய்யலாம், செலவு கைமீறி போனால், எவ்வளவு கடன் வாங்கலாம் என்பது குறித்து திட்டமிடப்படும். மேலும் , வருவாயை ஈட்ட என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என திட்டமிடுவதாகும். அதாவது, எவ்வளவு வரி விதிக்கலாம், எந்த அரசு நிறுவனத்தில் இருந்து எவ்வளவு வருவாயை ஈட்டலாம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்படும்.  இதை தமிழில் ஆண்டு நிதி நிலை அறிக்கை என அழைக்கிறோம். அதாவது, பொதுவாக நிதி ஆண்டு காலம் வரை( ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை ) இந்த திட்டம் செயல்படுத்தப்படும். சில நேரங்களில் , நீண்ட கால திட்டத்திற்கும் , செலவு செய்யப்படும்.


பட்ஜெட் தாக்கல்:


இந்திய நாட்டில் தற்போது, தொடர்ந்து 3வது முறையாக பாஜக தலைமையிலான கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலானது நடைபெற்றதால், இந்த நிதி ஆண்டுக்கான முழு ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. 


இந்நிலையில், தேர்தல் முடிவடைந்து , அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில், இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட், நாளை மறுநாள் ( ஜூலை 13 ) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதி அமைச்சகம்தான் மேற்கொள்ளும். அதாவது, நாட்டில் உள்ள பிற துறைகள் மற்றும் அமைச்சகத்திடம் இருந்து , அவர்களுக்கான செலவின விவரங்களை பெற்று, அதை தயாரிக்கும் பணியை நிதி அமைச்சகம் மேற்கொள்ளும். 




ஒப்புதல் கட்டாயம்:


இதையடுத்து, தயாரித்த பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ( தற்போது நிர்மலா சீதாராமன் ) மேற்கொள்வார். இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடன் , நிதி ஒதுக்கும் பணியை தொடங்கும். ஒருவேளை பட்ஜெட்டுக்கு , நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்றால், பெரும்பான்மை இல்லாத அரசாக மாறிவிடும். இதையடுத்து, அரசாங்கமானது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அரசாங்கமானது கவிழும் சூழ்நிலையும் உருவாகும். 


இந்நிலையில், நமது நாட்டில் எவ்வளவு வருவாய் வருகிறது, எந்த துறைக்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது. வருவாயை பெருக்க என்ன செய்யப்படுகிறது, என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம்தானே, ஏனென்றால் நாம் அளிக்கும் வரி பணமும் அரசுக்கு வருவாயாக செல்கிறது. இதனால், பட்ஜெட் தாக்குதல் தினத்தில் , கவனத்துடன் அலசி ஆராயுங்கள். உங்களுக்கு தொடர்புள்ள துறையில் , என்ன மாற்றங்கள் தேவை என்பதை, உங்களது தொகுதி எம்.பி-யிடம் அல்லது துறை சார்ந்த அமைச்சகத்திற்கு தகவல் தெரிவியுங்கள்.



Published at: 21 Jul 2024 07:52 PM (IST)
Tags: rahul gandhi pm modi BJP Nirmala Sitharaman Budget Budget 2024 CONGRESS Union Budget 2024 ministry of finance
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.