இந்தாண்டின் பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 25 நிமிடங்களில் வாசித்து முடித்தார் நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன். கடந்த ஆண்டைவிட இம்முறை குறைவான நேரத்தில் மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை ஐந்தாவது முறையாக தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு தொடங்கிய உரை நண்பகல் 12.30-க்கு முடிவடைந்தது.
வருமான வரி உச்சரம்பில் மாற்றம், பென்களுக்கான புதிய சேமிப்பு திட்டம், போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூபாய் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, நாடு முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கியதாக இருந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்பின், 2020 ஆம் ஆண்டு 2 மணி நேரம் 42 நிமிடம் வாசித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு 1 மை நேரம் 51 நிமிடம் வாசித்திருந்தார். 2020 -2021 ஆம் ஆண்டு நீண்ட நேரம் பட்ஜெட் உரை வாசித்தபோது, அவருக்கு அசெளகரியம் ஏற்பட்டதலால் 2 பக்கங்கள் மீதம் இருந்த நிலையிலேயே தனது பட்ஜெட் உரையை முடித்துகொண்டார்.
கடந்தாண்டு முதன்முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஒரு மணி நேரம் 32 நிமிடங்களில் பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கப்பட்டது. இம்முறை பட்ஜெட் உரையின் நேரம் குறைந்துள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், பா.ஜ.க. சார்ப்பில் தாக்கல் செய்யப்படும் கடைசி நிதிநிலை அறிக்கை இதுவாகும்.