2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் 31 ஜனவரி தொடங்கி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு கேள்வி நேரம் இருக்காது என நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. 31 ஜனவரி அன்று தொடங்க இருக்கும் நாடாளுமன்றத்தின் 8வது கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். அடுத்த தினமான 1 பிப்ரவரி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட் குறித்த நிதியமைச்சரின் உரை 11 மணிக்குத் தொடங்கி சுமார் 1.5 முதல் 2 மணிநேரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடமும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் முதல்கட்டம் 1 பிப்ரவரி தொடங்கி 11 பிப்ரவரி வரை நடைபெறும் என்றும் அடுத்த கட்டம் மார்ச் 14 தொடங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு கூட்டத்தொடர் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மக்களவையும் மாநிலங்களவையும் இந்த நாட்களில் தினமும் ஐந்து மணிநேரம் இயங்கும் ஆனால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இரண்டு அவைகளும் ஷிஃப்ட் முறையில் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31-ந் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் ஜனவரி 31-ந் தேதியில் இருந்து பிப்ரவரி 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31ம் தேதி நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்வார். முதல் அமர்வில், பட்ஜெட் மீதான அடிப்படை விவாதங்கள் நடைபெறும். இரண்டாம் அமர்வில், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிலைக்குழுக்கள் ஆய்வு செய்யும். அதன் பின், மக்களவையில் 2022 நிதி மசோதா தாக்கல் செய்யப்படும். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள் மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 14 நாட்கள் கழிந்த நிலையில், அந்த மசோதா அரசியல் சாசனத்தின் 109-வது பிரிவு உட்பிரிவு 5-ன்படி நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.
குளிர்கால கூட்டத் தொடர்:
முன்னதாக, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், ஒருநாள் முன்னதாகவே கடந்த டிசம்பர் 21ம் தேதி முடித்துக்கொள்ளப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையில் 82 சதவீதமும், மாநிலங்களவையில் 47 சதவீதமும் மட்டுமே அலுவல்கள் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறினார்.மக்களவையில் 9 மசோதாக்களும், மாநிலங்களவையில் 11 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தா