பாம்பு கடியில் இருந்து விவசாயிகள் தப்பிக்க பம்புசெட்டுகளை தொலைவில் இருந்தே செல்போன் மூலம் இயக்க தானியங்கி கருவிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார். அதில், ‘பம்பு செட்டுகளை தொலைவில் இருந்தே செல்போன் மூலம் இயக்க உதவிடும் தானியங்கி கருவிகளுக்கு ரூ.5000 வரை மானியம் வழங்கப்படும். இரவு நேரத்தில் பம்புசெட்டுகளை இயக்க செல்லும் விவசாயிகள் பாம்பு கடியில் இருந்து தப்பிக்க இந்த திட்டம் உதவும். இந்த திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
TN Agriculture Budget 2022 LIVE: தமிழ்நாட்டில் டிஜிட்டல் விவசாயம்... புதிய உழவர் சந்தைகள்... வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் இதோ!
மேலும், “சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு தானிய, எண்ணெய் வித்து மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 65 ஆயிரம் கோடி ரூபாயில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட்டுகள் வழங்கப்படும். வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வார ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், டிரோன் மூலமாக இடுபொருள் தெளிப்பு திட்டத்திற்கு ரூ.10.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், டிரோன் மூலமாக பூச்சி மருந்து தெளிப்பு உள்ளிட்ட திட்டங்கள், 14000 ஏக்கரில் செயல்படுத்தப்படும் எனவும், சென்னை மற்றும் திருச்சியில் பூச்சிக்கொல்லி அளவை அறிந்து கொள்ளும் வகையில் ரூ.15 கோடியில் ஆய்வு மையங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்