தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் குற்றம்சாட்டி வந்தனர். 


இந்நிலையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.அதில்,  இன்று வேளாண்துறையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணி முதல் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டபேரவையில் தாக்கல் செய்து செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் வேளாண் பட்ஜெட் இதுவாகும். அமைச்சர் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் வேளாண் சார்ந்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் சிறப்பம்சம் மற்றும் முக்கிய அம்சங்கள்(TN Agri Budget 2022 Highlights) குறித்து தெரிந்து கொள்ளலாம்.


* வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.


* விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு


* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு. மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு


* சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.28.50 கோடி ஒதுக்கீடு


* பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு


* ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த ரூ.65 கோடி ஒதுக்கீடு


* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு


* சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு


* கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்


* வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும்


* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவித மானியம் வழங்கப்படும்


* இயற்கை வேளாண்மை, விளை பொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்


* விவசாயிகள் இடுபொருட்களை பெரும்போது பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.


* விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


* 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடி, புதிதாக உழவர் சந்தைகள் உருவாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு


* தரமான அச்சுவெல்லம் தயாரிக்க 100 விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்


* வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்து கொள்ள செயலி உருவாக்கப்படும்


* மாவட்ட, மாநில அளவில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்


* வேளாண்மை துறைக்கு ரூ. 33, 007 கோடி நிதி ஒதுக்கீடு


* திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் உணவு பூங்காக்கள் அமைக்க ரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு 


* உழவர் சந்தைகளில் காலையில் காய்கறிகளும், மாலையில் சிறு தானியங்களும் விற்க நடவடிக்கை 


* பம்பு செட்டுகளை தொலைவில் இருந்தே செல்போன் மூலம் இயக்க உதவிடும் தானியங்கி கருவிகளுக்கு ரூ.5000 வரை மானியம் வழங்கப்படும்


* மழையில் இருந்து விவசாய பொருட்களை பாதுகாக்க 60,000 விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கப்படும்


* பனை மரங்கள் அதிகளவில் வளர்க்க விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பனை மரக்கன்றுகள் வழங்கப்படும்


* வேளாண் துறைக்கு 2022-23ஆம் ஆண்டுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.33,007.68 கோடி.  சென்ற 2021-22ஆம் ஆண்டின் திருந்திய மதிப்பீடு -ரூ.32,775.78 கோடி 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண