இந்தியாவின் நிதி நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்குவது 'மத்திய பட்ஜெட், ஆகும், இது ஆண்டுத்தோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இந்தியாவின் முதல் பட்ஜெட் முதல் இன்றைய டிஜிட்டல் பட்ஜெட் வரையிலான முக்கிய தகவல்களை காணாலம்.  

Continues below advertisement

இந்திய பட்ஜெட்டின் வரலாறு: 

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியது. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்களை கண்டது. இந்தியாவில் முதல் பட்ஜெட் ஏப்ரல் 7, 1860 அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இதை வழங்கியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் வில்சன் ஆவார்.அன்றைய காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு கீழ் மாற்றப்பட்ட பிறகு இந்த முறை அறிமுகமானது.

வில்சன் தான் முதன்முதலில் இந்தியாவில் 'வருமான வரி' (Income Tax) முறையை அறிமுகப்படுத்தினார். இது இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், நவீன நிதி முறைக்கு அதுவே அடித்தளமாக அமைந்தது. 

Continues below advertisement

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்: 

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று ஆர்.கே. சண்முகம் செட்டி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்ஜனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசான பிறகு, பிப்ரவரி 28, 1950 அன்று ஜான் மத்தாய் முதல் குடியரசு தின பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். திட்டக்குழுவின் (Planning Commission) முக்கியத்துவத்தை இந்த பட்ஜெட் வலியுறுத்தியது.

மொழியில் வந்த மாற்றம்: 

ஆரம்பத்தில் பட்ஜெட்டானது ஆங்கிலத்தில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது, 955-56 நிதியாண்டில் இருந்து, அப்போதைய நிதி அமைச்சர் சி.டி. தேஷ்முக் பட்ஜெட் ஆவணங்களை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் அச்சிடும் முறையைக் கொண்டு வந்தார். 1977 வரை பட்ஜெட் ஆவணங்கள் குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே அச்சிடப்பட்டன, பின்னர் அது மிண்டோ சாலைக்கு மாற்றப்பட்டது.

நேரம் மாற்றம் தேதியில் நிகழந்த மாற்றங்கள்

1999 ஆம் ஆண்டு வரை லண்டன் நேரத்திற்கு ஏற்ப மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, இதை அப்போதைய நிதியமைச்சர்  யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணி என்று மாற்றி அமைத்தார்.

வழக்கமாக பிப்ரவரி மாத இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை, 2017 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு மாற்றினார். இதன் மூலம் புதிய பொருளாதார நிதியாண்டு தொடங்கும் முன்பே (ஏப்ரல் 1) பட்ஜெட்டை வழிவகை செய்யப்பட்டது. அதேப்போல்  92 ஆண்டுகளாகத் தனியாக இருந்த ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

காகிதமில்லா பட்ஜெட்

2021-ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாரம்பரியமான பட்ஜெட் சூட்கேஸிற்குப் பதிலாக, 'பஹி-காதா' (Bahi-Khata) உறையில் வைக்கப்பட்ட டேப்லெட் (Tablet) பயன்படுத்தப்பட்டது.

அதிக பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தவர்கள்

வரிசை எண்நிதி அமைச்சர்பட்ஜெட்டுகளின் எண்ணிக்கைவிவரங்கள்
1மொரார்ஜி தேசாய்108 முழு பட்ஜெட்டுகள் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்டுகள்.
2ப. சிதம்பரம்9வெவ்வேறு பிரதமர்களின் கீழ் 9 முறை தாக்கல் செய்துள்ளார்.
3நிர்மலா சீதாராமன்92026-ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று தனது 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். (இதுவரை 8 முழு பட்ஜெட் + 1 இடைக்கால பட்ஜெட்).
4பிரணாப் முகர்ஜி8காங்கிரஸ் ஆட்சியின் போது 8 முறை தாக்கல் செய்துள்ளார்.
5யஷ்வந்த் சின்ஹா8வாஜ்பாய் அரசாங்கத்தின் போது 8 முறை தாக்கல் செய்தார்.