Budget 2026 LIVE:வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம்
Union Budget 2026 LIVE Updates: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அதுதொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் காணலாம்.

Background
2026-2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதனை காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் தொடர்ச்சியான 9வது பட்ஜெட் இதுவாகும். இந்த...More
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
பட்ஜெட்டில் தங்கம் விலையை குறைக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த அறிவிப்பும் வெளியாகாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பங்குச்சந்தை இறங்குமுகத்தில் சென்றுள்ளது.
அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் இறக்குமதிக்கான வரிகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு படிக்கச்செல்லும் மாணவர்களுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வரி குறைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு படிக்கச்செல்லும் மாணவர்களுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வரி குறைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இ வாகனங்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
கடல் சார்ந்த உணவுகளை ஏற்றுமதி செய்வோருக்கு இறக்குமதி பொருட்களுக்கு மட்டும் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரிச் சட்டத்தில் ஈவுத்தொகைக்கான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு 2 சதவீதமாக வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குகளை திரும்ப வாங்கும் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி கிடையாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 4.3 சதவீதமாக இருக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களுக்கான வரி குறைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தனி நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜுலை 31ம் தேதி வரை கால அவகாசம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வருமான வரித்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வருமானவரித் தாக்கல் மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விபத்துக் காப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதி்ய வருமான வரிச்சட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நிதிக்குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு ரூபாய் 1.4 லட்சம் கோி நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புலிகள் மாநாடு இந்தியாவில் நடப்பாண்டு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காட்டில் பறவைக்காட்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்க She Mart திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 15 ஆயிரம் இந்திய பள்ளிகளில் கன்டன்ட் கிரியேட்டர்ஸ் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவைத்துறையில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வழிமுறைகளை கண்டறிய குழு அமைக்கப்படும்
இந்தியாவில் முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்க பிரத்யேக திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வியை ஊக்குவிக்க 5 பல்கலைக்கழக நகரங்கள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பொதிகை மலையில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் தொல்லியல் இடங்கள் கலாச்சார தளங்களாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-27ம் ஆண்டுக்கான நிதியாண்டில் ரூபாய் 16.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை கல்வி நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க நாடு முழுவதும் 5 மருத்துவ மையங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மகளிர் விடுதி உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் மருத்துவ பணியாளர்களை உருவாக்க திட்டம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரும் ஆண்டில் 1.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மூலதனச் செலவுகள் 2014ம் ஆண்டு 2 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2026ம் ஆண்டில் 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மோடி தலைமையிலான ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீ்ட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு சாதனங்களை உற்பத்தி செய்ய பிரத்யேக திட்டம் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கித்துறையை சீர்த்திருத்தி அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - ஐதரபாத், சென்னை - பெங்களூர் உள்பட 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 5 ஆயிரம் கோடி முதலீட்டில் முக்கிய நகரங்களில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை - பெங்களூர்- ஐதரபாத் இடையே அதிவேக ரயில்பாதை அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கண்டெய்னர் உற்பத்தியை அதிகரிக்க ரூபாய் 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூலதனச் செலவு பாஜக ஆட்சியில் ரூபாய் 12.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்திற்கு பிரத்யேக ரயில் பாதை அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
குறு நிறுவனங்களை ஆதரிக்க ரூபாய் 2 ஆயிரம் கோடி நிதி உதவியுடன் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில்துறைக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில்துறைக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் துறைக்கு ரூபாய் 4 ஆயிரம் கோடி ஒதுக்கி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.
பாரம்பரிய தொழில்களை ஊக்குவிப்பதற்காக 200 பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அரியவகை கனிமங்கள் உற்பத்திக்கு என வழித்தட திட்டம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டத்தை முன்மொழிந்தார் நிர்மலா சீதாராமன்
நாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் இலக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
3 கடமைகள் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் துறையை ஒதுக்க ரூபாய் 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ரூபாய் 10 ஆயிரம் கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதே முதல் கடமை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 350 சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர மக்கள் துணை நிற்கின்றனர் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடவதை உறுதி செய்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
9வது முறையாக தொடர்ச்சியாக பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் ரூபாய் 3 ஆயிரத்து 112 கோடி நிதி ஒதுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்னும் ஒரு மணி நேரத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், குடியரசுத் தலைவரை நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஒப்புதல் பெற்றார்.
பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்னும் ஒரு மணி நேரத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், குடியரசுத் தலைவரை நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஒப்புதல் பெற்றார்.
2026-2027 மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் தங்கம் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது
2026-2027ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் சிக்கலான கசூட்டி எம்பிராய்டரியுடன் கூடிய மெஜந்தா நிறத்திலான காஞ்சிபுரம் பட்டு சேலையை அணிந்துள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தின் நெசவு பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த ஆடையை அவர் அணிந்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட உள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட உள்ளது.
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் வருமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.
1999 ஆம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இது ஆங்கிலேய கால வேலை நேரங்களுடன் இணைக்கப்பட்ட காலனித்துவ கால நடைமுறையாக பார்க்கப்பட்டது. அந்த மரபை அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மாற்றி பட்ஜெட் தாக்கல் காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார். 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தபோது அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 27 சனிக்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.