மத்திய பட்ஜெட்
நாடே எதிர்பார்த்து காத்திருந்த மத்திய பட்ஜெட்டை 9-வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில் கடந்த 12 ஆண்டுகளாக பணவீக்க விகிதம் தொடர்ந்து நிலையான விகிதத்தில் இருந்து வருவதாக தெரிவித்தார். நீடித்த வளர்ச்சி, நிலைத்தன்மை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். இதனை தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் படி,
- பொதுக்கட்டமைப்புகளுக்கான மூலதன ஒதுக்கீடு 12.2 லட்சம் கோடி ரூபாய்.
- சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 10,000 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியம்.
- கொள்கலன் உற்பத்திக்கு 10,000 கோடி ரூபாய் முதலீடு
- 20 புதிய தேசிய நீர்வழிப் பாதைகள் உருவாக்கப்படும்
- கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு இடர் உத்தரவாத நிதியம் உருவாக்கப்படும்.
- ஹைதராபாத் முதல் சென்னை, சென்னை முதல் பெங்களூருவிற்கு அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் , நகரங்களை அதிவேகமாக இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த 'வளர்ச்சி இணைப்பான்களின்' நோக்கம் என தெரிவித்தார். அந்த வகையில் நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும் என கூறினார். இதற்கான வழித்தடத்தையும் வெளியிட்டார்.
- மும்பை – புனே
- புனே – ஹைதராபாத்
- ஹைதராபாத் – பெங்களூரு
- ஹைதராபாத் – சென்னை
- சென்னை – பெங்களூரு
- டெல்லி – வாராணசி
- வாராணசி – சிலிகுரி
- ’தமிழ் மலை’ என்று அழைக்கப்படும் பொதிகை மலையில் சுற்றுலா, மலையேற்றத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும்
- ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்.
