2027-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 16ஆவட்க்ய் நிதிக்குழு அறிக்கையையும் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், கிராமங்களில் காதி, தொழிலை வளர்க்க மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சமீபத்தில், மத்திய அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, விபி ஜி ராம் ஜி என பெயரிட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த நிலையில், மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாட்டில் அரியவகை தாதுக்கள் வழித்தடம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
