2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி என்று தெரிவித்த அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:
* 9 முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது
* 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிப்பு
* வேலைவாய்ப்பு, கல்வி திறன் மேம்பாட்டிற்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
* 4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன
* இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
* அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம்
* விவசாய துறையில் டிஜிட்டல் புரட்சி செய்ய அனைத்து கட்டமைப்புகளும் தயார்
* 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம்
* தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி, சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
* விவசாயத்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
* பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
* நாட்டில் வேலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* உற்பத்தி துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை
* வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டம்
* முதல்முறை வேலைக்கு சேர்பவர்களை ஊக்குவிக்க இபிஎப்ஓ திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி
* உற்பத்தித்துறையில் புதிதாக வேளையில் சேர்பவருக்கு ஊக்கத்தொகையாக ஒரு மாத ஊதியம்
* 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்க புதிய திட்டம்
* உள்நாட்டிலேயே கல்வி கற்போருக்கு ரூ.10 லட்சம் கல்விக் கடன் வழங்கப்படும்
* பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தாங்கும் விடுதிகள் அமைக்கப்படும்
* மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை கடன்
* நாடு முழுவதும் 20 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்
* கடுகு, நிலக்கடலை, சூரிய காந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
* புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் ஊக்குவிக்கப்படும்
* நாட்டின் கிழக்கு பகுதி மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
* பீகார் மாநிலத்தில் மட்டும் 3 அதிவேக சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது
* ஆந்திரா தலைநகர் அமராவதியின் வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி நிதி உதவி
* ஆந்திர மாநிலத்துக்கு கூடுதல் தேசிய நெடுஞ்சாலைகள் அறிமுகம்
* ஆந்திராவில் நதிநீர், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி
* ஹைதராபாத் - பெங்களூரு பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் திட்டம்
* பீகாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த 26,000 கோடி ரூபாய் நிதி
* பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி
* பிரதமரின் வீடு காட்டும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்
* கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
* மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு திட்டங்களுக்கு 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
* சிறு, குறு தொழில்களுக்கு கடன் உறுதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
* சென்னை - விசாகப்பட்டினம் இடையே அதிவிரைவு சாலை கொண்டு வரப்படும்
* முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது
* 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும்
* ஊரகப்பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
* தொழிலாளர்களுக்காக தங்குமிட வசதி அரசு, தனியார் கூட்டில் உருவாக்கப்படும் என அறிவிப்பு
* 12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும்
* 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்
* புதிய 'இன்டெர்ன்ஷிப்' திட்டம் மூலம் ஒரு கோடி இளைஞர்கள் பலன் பெறுவர்
* நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும்
* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் காட்டப்படும்
* ஆந்திராவின் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்
* அரிய வகை கனிம உற்பத்திக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்
* புதிதாக இ வணிகவியல் மையங்கள் உருவாக்கப்படும்
* நாடு முழுவதும் மாநகரங்களை மேம்படுத்த சிறப்பு வரைவு திட்டங்களை உருவாக்கப்படும்
* நாட்டில் உள்ள 100 பெருநகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை
* நாடு முழுவதும் மாநகரங்களை மேம்படுத்த சிறப்பு வரைவு திட்டங்கள் உருவாக்கப்படும்
* மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும்
* அணுசக்தி துறைக்கு கூடுதல் முக்கியத்துவம்
* சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரி சலுகை செய்யப்படும்
* NTPC - BHEL கூட்டுறவில் 800 மெகாவாட் அல்ரா கிரிட்டிக்கல் தொழில்நுட்பத்தில் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்
* பீகாரில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு
* பீகார் மாநில நீர்பாசன, வெள்ளத்தடுப்பு திட்டங்களுக்கும் புதிய அறிவிப்புகள் வெளியீடு