நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தபிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அனைத்து பிரிவு மக்களையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது மத்திய பட்ஜெட் 2023. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனிநபர் வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமான வரி நடைமுறையை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ” என்று தெரிவித்தார்.
2023- 2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்த விளக்கம்:
இந்தப் பட்ஜெட்டில் முக்கியத்துவம் வாய்தவைகளாஅக நான்கை குறிப்பிடலாம். பெண்களின் சமுதாய பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள், சுற்றுலாத் துறை, கலைஞர்கள், பசுமை வளர்ச்சி உள்ளிட்டவைகளௌக்கான அறிவிப்புகள் ஆகிய நான்கும் முக்கியத்தும் வாய்ந்தவையாக கருதுகிறேன்.
வருமான வரி நடைமுறையில் புதிதாக கொண்டுவந்துள்ள மாற்றம் குறித்து பேசுகையில், : புதிய வருமான வரி கொள்கையில் நிறைய சலுகைகள் உள்ளன. இது மக்களுக்கு உகந்ததாக இருக்கும். எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் எளிதில் பொருந்தக்கூடிய நேரடி வரி முறைக்காக நாடு காத்திருக்கிறது. மக்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று வருமான வரி செலுத்துவதில் கணிசமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.” என்று விளக்கமளித்தார்.
நிதித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “தொழில்நுட்ப புரட்சி 4.O. -விற்கு மக்கள் பயிற்சி அளிக்கப்படுவர். டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க செய்ல்படுவோம் என்று கூறினார்.
வேளாண் துறையினை வளர்ச்சியடை செய்ய கடன் வழங்க நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேளாண் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் முதுகெலுமபான விவசாய துறையை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாய ஊக்குவிக்க நிதி வழங்கப்படும் என்றும், புது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு முயற்சிகள் கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி அதிகரித்து அதிக லாபம் ஈட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு தொழில் மற்றும் முதலீடு உள்ளிட்டவைகளுக்கு சிறப்பான இந்தப் பட்ஜெட் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பணவீக்கம் உயர்ந்து வருவது குறித்து பேசுகையில், பணவீக்கம் குறைந்துள்ளதை நீங்களே கண்டிருக்கலாம். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.