கிரிப்டோகரன்சிக்கு 30% வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பில், "ரிசர்வ் வங்கி சார்பில் கிரிப்டோகரன்சி வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த டிஜிட்டல் ரூபாய் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் கரன்சி மூலம் இணையபரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்" என்று அறிவித்தார்.
கிரிப்டோன்சிக்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டிருப்பதால், டிஜிட்டல் கரன்சிக்கும் கணிசமாக வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதால் இதன் மீது அனைவரும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துவதால் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வும் ஏற்பட்டுள்ளது.
நெட்டிசன்கள் மீம்ஸ்:
அனைத்துக் கண்களுமே பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் ஏதேனும் சலுகை வரும் என எதிர்பார்த்திருக்கு அமைச்சரோ, க்ரிப்டோ டேக்ஸ் என்று கூறி இதுவரை சட்ட அங்கீகாரம் பெறாத கிரிப்டோகரன்ஸிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதுபோல் பேசினார். மேலும், மெய்நிகர் வருமானத்தில் 30% வரி என்றார். இதையெல்லாம் கூறிய அவர் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரிப்டோகரன்சி சட்டமசோதா பற்றி எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில் நினைச்சது ஒண்ணு கிட்டைச்சது ஒண்ணு என்ற தொணியில் வந்த அறிவிப்பு குறித்து சமூகவலைதளங்களில் புலம்பித் தள்ளினர்.
அவற்றின் சிறு தொகுப்பு: