சேலம்: BSNL பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின சலுகை திட்டம், கடந்த, 1ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சேலம் வணிகப்பகுதி பொது மேலாளர் ரவீந்திர நாத் தெரிவித்துள்ளார்.

 ரூ.1க்கு அதிரடி ஆஃபர்

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தியுள்ள குறைந்த விலை  மற்றும் கவர்ச்சிகரமான சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் அன்லிமிடட் அழைப்பு, ஒரு நாளைக்கு 2GB அதிவேக டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS ஆகியவற்றை 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வெறும் 1 ரூபாய்க்கு தருகிறது. இந்த சலுகை குறிப்பாக புதிய BSNL வாடிக்கையாளர்களுக்கானது, இதன் நோக்கம் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் முடிந்தவரை பலரை சென்றடைவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது

இந்திய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான, BSNL பி.எஸ்.என்.எல்., சுதந்திர தின சலுகை திட்டம், கடந்த, 1ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் முழுதும், பி.எஸ்.என்.எல்., '4G' சேவையை இலவசமாக சோதித்து பார்க்க, வெறும், 1 ரூபாய் கட்டணத்தில் வாய்ப்பு அளிக்கிறது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, '4ஜி' தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க, இத்திட்டத்தில் உள்ளூர், எஸ்.டி.டி., அழைப்பு, தினமும், 2 ஜி.பி., அதிவேக டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., பி.எஸ்.என்.எல்., சிம் ஒன்று இலவசமாக கிடைக்கும்.

ஆத்ம நிர்பார் பாரத் திட்டம்

'ஆத்ம நிர்பார் பாரத்' திட்டத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ள, '4ஜி' சேவை மூலம், இந்தியா, சொந்த தொலை தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய சில நாடுகளில் ஒன்றாக உள்ளதில், பி.எஸ்.என்.எல்., பெருமை கொள்கிறது. உள்நாட்டு நெட் வொர்க்கை, 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க, வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

'மேக் - இன்- இந்தியா' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுதும் ஒரு லட்சம், '4ஜி' தளங்களை, பி.எஸ்.என்.எல்., நிறுவி வருகிறது. இது பாதுகாப்பான, உயர்தர, அதேநேரம் மலிவான மொபைல் இணைப்பின் மூலம், 'டிஜிட்டல்' இந்தியாவுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய மைல் கல். அதனால் அருகே உள்ள சேவை மையம் அல்லது பி.எஸ்.என்.எல்., மேளா நடக்கும் இடங்களில் சுதந்திர திட்டத்தை பெறலாம் என, சேலம் வணிகப்பகுதி பொது மேலாளர் ரவீந்திர நாத் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க:

TRAI-யின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த சில மாதங்களில், லட்சக்கணக்கான பயனர்கள் BSNL மற்றும் Vi-யிலிருந்து பிற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறைந்து வரும் பயனர் தளத்தைக் கருத்தில் கொண்டு, BSNL தனது சந்தைப் பங்கை மீண்டும் வலுப்படுத்த இந்த தீவிரமான உத்தியைக் கையாண்டுள்ளது. ஒரு பயனருக்கு சராசரி வருவாய் (ARPU) அதிகரிக்கும் இலக்கை BSNL நிறுவனத்திற்கு அரசாங்கம் வழங்கியுள்ளது, ஆனால் இதற்காக கட்டண விலைகளை அதிகரிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. இப்போது மேம்பாடுகள் கண்காணிக்கப்படும் வகையில் ஒவ்வொரு மாதமும் மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும்.