காலநிலை மாற்றம் குறித்து TechCrunch talk - என்னும் நிகழ்ச்சியில் பேசிய உலகப்பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், க்ரிப்டோ கரன்சி மற்றும் NFT முதலீடுகள் குறித்து தனது காட்டமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். இவை 100% முட்டாள்கள் கோட்பாட்டிற்கு இணையானது என கருத்து தெரிவித்துள்ள பில்கேட்ஸ், குரங்குகளின் விலை உயர்ந்த டிஜிட்டல் படங்கள் உலகத்தை மேம்படுத்த உதவும் என கிண்டல் அடித்துள்ளார்.
மகத்தான முட்டாள் கோட்பாடு
மகத்தான முட்டாள் கோட்பாடு படி, அதிக விலை கொண்ட சொத்துகளை, இன்னும் பெரிய முட்டாளுக்கு விற்க முடிவதால் அவற்றின் விலை உயர்வதை குறிப்பிடுகிறது. அவற்றின் மதிப்பு மிகவும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் இதனை குறுகிய கால நோக்கத்துடனோ அல்லது நீண்டகால நோக்கத்துடனோ வாங்குவதற்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பழைய முதலீட்டு முறைகள் மீது நம்பிக்கை
மேலும் தான் பழைய முதலீட்டு முறைகளையே நம்புவதாகவும். பண்ணை அல்லது உற்பத்தி செய்யும் நிறுவனம் போன்ற சொத்து வகுப்புகளுக்கு பழகிவிட்டதாக கூறும் பில்கேட்ஸ், உலக அளவில் பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோ கரண்சிகள் செயலிழந்து வருவதாக தெரிவித்தார்.
சரியும் கிரிப்டோ சாம்ராஜ்யம்
கடந்த ஆண்டு நவம்பரில் பிட்காயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 69,000 டாலர் என்ற உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் தற்போது அதன் பதிப்பில் மூன்றில் இரண்டு பங்கை இழந்து, 23,000 டாலராக சரிந்த நிலையில் தற்போது அதன் மதிப்பில் மேலும் 25% சரிந்து பிட்காயின் சரிவை நோக்கி சென்று வருகிறது.
சரிவுக்கு என்ன காரணம்?
அமெரிக்க டாலரின் மதிப்பானது கடந்த 20 ஆண்டுகளுக்கு இல்லாதளவுக்கு உச்சம் தொட்டுள்ள நிலையில், இது கிரிப்டோசந்தையில் மிகப்பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகளின் சந்தை மதிப்பானது 1 டிரில்லியன் டாலருக்கும் கீழாக காணப்படுகின்றது. தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு இடையே சர்வதேச பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல நாடுகளும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம், இது வட்டியில்லா, ரிஸ்கான முதலீடுகளில் முதலீடுகளை தடுக்கலாம். ஏற்கனவே இருக்கும் முதலீடுகளை வெளியே எடுக்க தூண்டலாம். இதுவும் கிரிப்டோ சந்தையின் பெரும் சரிவுக்கு ஒரு காரணம் எனலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்