வருமானத்தில் கொஞ்சம் தொகை எப்படியாவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவரே கிடையாது எனலாம். காசு கையில் இருந்தால் எப்படியும் செலவாகிவிடும் என்று வங்கிகளில் சேமித்து வைக்க தொடங்கினோம். பிறகு, காலப்போக்கில் பணப்பரிவர்த்தனைகள் வங்கி மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்டாய நிலை வந்த பிறகு, அத்தியாவசிய பணப்பரிமாற்றத்தில் வங்கிகளின் பங்கு முக்கியத்தும் வாய்ந்ததாக மாறியது.
வாரத்தில் திங்கள் கிழமை என்றால் வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏனெனில், பென்சன் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் வங்களின் மூலமே நடைபெறுகின்றன. ’டிஜிட்டல் இந்தியா‘, ஆன்லைன் வங்கி முறை செயலில் இருந்தாலும், பலரும் அவற்றை பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல் இருக்கிறது. அவர்கள் வங்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். வங்கி நிதி உதவியை நாடி இருப்பவர்கள் பலர். இதனால் வங்கியின் வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை தெரிந்து வைத்துகொள்வது நல்லது இல்லையா? ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
வங்கி விடுமுறை நாட்கள் :
மாதத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதோடு, வாரத்தின் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பொது விடுமுறை நாட்ககளில் வங்கிகள் செயல்படாது. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி மாதம் (2023) 14 நாட்கள் பொதுவிடுமுறை நாட்கள் வருவதால் வங்கிகள் செயல்படாது.
ஜனவரி மாத விடுமுறை நிலவரம்:
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, ஜனவரி மாதம் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை பட்டியல் மாநிலம் வாரியாக மாறுபடும். பிற மாநிலங்களில் உள்ளூர் விழாக்கள், பண்டிகைகளுக்கு ஏற்றவாறு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
ஜனவரி 2023- இல் வார விடுமுறை நாட்கள்:
ஜனவரி, 12: சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் / தேசிய இளைஞர்கள் தினம்
ஜனவரி, 26 : குடியரசுத் தினம்
ஜனவரி மாதத்தில் வார இறுதி விடுமுறைகள்
ஜனவரி, 01 : வாராந்திர விடுமுறை (ஞாயிறு) - புத்தாண்டு தினம் -2023
ஜனவர், 08 : வாரந்திர விடுமுறை (ஞாயிறு)
ஜனவரி- 14 வாராந்திர விடுமுறை (இரண்டாவது சனிக்கிழமை) - பொங்கல் பண்டிகை
ஜனவரி,15: வாராந்திர விடுமுறை (ஞாயிறு) , திருவள்ளுவர் பிறந்த நாள்
ஜனவரி 22: வாரந்திர விடுமுறை (ஞாயிறு)
ஜனவரி ,28 : வாராந்திர விடுமுறை (நான்காவது சனிக்கிழமை)
ஜனவரி, 29: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
மேற்கூறிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், UPI சேவைகள் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.