Amazon Flipkart Festival Sale: ஆன்லைன் வர்த்தகத் தளங்களான அமேசான் மற்றும் ஃப்லிப்கார்ட் இந்த மாத இறுதியில் பிரமாணட ஃபெஸ்டிவல் ஆபர் சேலை தொடங்குவதாக அறிவித்துள்ளன.
இந்தியாவின் முன்னனி ஆன்லைன் வர்த்தக தளங்களாக இருப்பவை அமேசான் மற்றும் ஃப்லிப்கார்ட். இந்த இரண்டு நிறுவனங்களுமே ஆண்டுக்கு பல விழாக்கால ஆஃபர்களை வழங்கி தனது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அவ்வகையில், தற்போது இரண்டு நிறுவனங்களுமே செப்டம்பர் மாதத்தில் பிரம்மாண்ட விழாக்கால ஆஃபர்களை பற்றிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது. இதில் ஏற்கனவே அமேசான் தனது பிரம்மாண்ட விழாக்கால ஆஃபர் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விழாக்காலத்தை ஒட்டி எஸ்பிஐ கார்ட் வைத்திருபவர்கள் அவர்களுடைய முதல் பர்சேஸில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி பெறமுடியும் என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி M, iQoo போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டுக்கான Amazon Great Indian Festival சீசனை ஸ்பான்சர் செய்துள்ளது.
அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள், கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் 2022 சேலை முன்னரே பயன்படுத்தி சலுகைகள் மூலம் பொருட்களை வாங்க முடியும். செப்டம்பர் 23ல் தொடங்கும் இந்த சேலில் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் அதன் ஆக்சஸரிகளுக்கு 40 சதவீதம் வரை ஆஃபர் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் Redmi 11 Prime 5G, iQoo Z6 Lite 5G, iPhone 14 சந்தையில் புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களுக்கும் ஏராளமான சலுகைகள் இருக்கிறது.
லேப்டாப்ஸ், ஸ்மார்ட்வாட்சுகள், ஹெட்ஃபோன்கள் ஆகியனவற்றிற்கு 75% வரை தள்ளுபடி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் புதிய பல அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கும். அமேசான் கிரேட் இண்டியன் சேலுக்கு ஒரு பில்ட் அப் கொடுக்கும் வகையில் இப்போதே எஸ்பிஐ டெபிட், கிரெட் கார்டுகள் வைத்திருப்போருக்கு என பிரத்யேகமாக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை செப். 25 வரை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மற்றொரு நிறுவனமான ஃப்லிப்கார்ட் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் விரைவில் ‘’பிக் பில்லியன் டே சேல்’’ துவங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஃபிலிப்கார்ட் நிறுவனம் நடத்தும் இந்த ஆஃபர் சேலானது தீபாவளியை குறிவைத்து இந்த சேல் நடத்தபடுகிறது. தீபாவளிக்கு பெரும்பாலும் அனைவரும் பொருட்கள் வாங்குவார்கள் என்பதாலும், தீபாவளியில் இருந்து 5ஜி அலைக்கற்றை இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுவதாலும், மக்கள் மத்தியில் 5ஜி தொழில்நுட்ப மொபைல்களை வாங்க பெரும் ஆர்வம் காட்டுவார்கள் என்பதாலும் அதிரடியான ஆஃபர்களை இரு நிறுவனத்திடமிருந்தும் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.