அமேசான் பண்டிகை கால சேலில், சாம்சங் டேப்ளட்கள் பிரத்யேக ஆஃபரில் அறிவிக்கப்பட்டுள்ளன. சாம்சங் நிறுவனத்தின் 8, 10, 12 இன்ச் டேப்ளட்களை எக்ஸ்சேஞ் ஆஃபரில் வாங்கவும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஐசிஐசிஐ, கோட்டக் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1500 தள்ளுபடியில் வாங்கலாம். அதுவும் குறிப்பாக கோட்டக் வங்கி வாடிக்கையாளர்கள்,  No-Cost EMI ல் வாங்கலாம்.


1- Samsung Galaxy Tab A7 Lite 22.05 cm (8.7 inch)


அமேசான் பண்டிகை கால சேலின் ஒரு பகுதியாக சாம்சங் கேலக்ஸி டேப் A7 லைட் (8.7 இன்ச்), வெறும் ரூ.11,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.14,500. இதனை வாங்கும் போது ஐசிஐசிஐ வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் ரூ.1500 சலுகை கிடைக்கும். கோட்டக் வங்கி கார்டுகளுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ சலுகை உண்டு. இந்த நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையைப் பயன்படுத்தி வட்டியில்லா மாதத் தவணையில் நீங்கள் டேப்ளட்டைப் பெறலாம்.


இந்த டேபில் 8.7 இன்ச் திரை,  3GB RAM and 32GB ஸ்டோரேஜ் உள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு உதவியுடன் 1TB வரை விரிவாக்கம் செய்யலாம். MT8768T பிராசஸர் உள்ளது.  8MP ப்ரைமரி கேமரா,  2MP செல்ஃபி கேமரா உள்ளன. Dolby Atmos ஸ்பீக்கர் உண்டு. 5100 mAh பேட்டரி உள்ளது. 


2-Samsung Galaxy Tab A7 26.31 cm (10.4 inch) 


சாம்சங் கேலக்ஸி டேப் A7 லைட் (10.4 இன்ச்)  டேபை ரூ.14,999க்கு வாங்கலாம். இதன் ஒரிஜினல் விலை ரூ.20,999. இதிலும், ஐசிஐசிஐ, கோட்டக் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி கூடுதலாக ரூ.1500 சலுகை பெறலாம். அதேபோல் பழைய ஸ்மார்ட் ஃபோன் அல்லது டேப்ளட்டைக் கொடுத்து எக்ஸ்சேஞ் செய்யும் போது இந்த டேபை வெறும் ரூ. 14,000க்கு வாங்கும் வாய்ப்பு கிட்டும்.


இந்த டேபில் 10.4 இன்ச் திரை, 3GB RAM and 32 GB ஸ்டோரேஜ் உள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு உதவியுடன் 1TB வரை விரிவாக்கம் செய்யலாம். ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உள்ளது. குவால்காம், ஸ்நாப் ட்ராகன் 662 ப்ராசஸர் உள்ளது. 8MP ப்ரைமரி கேமரா,  5MP செல்ஃபி கேமரா உள்ளன.  7,040 mAh பேட்டரி உள்ளது. 
 
 3-Samsung Galaxy Tab S7 FE 31.5 cm (12.4 inch)  


சாம்சங் கேலக்ஸி டேப் S7 FE  (12.4 inch) மிகச் சிறப்பான அம்சங்கள் கொண்ட டேப்ளட். இதன் விலை ரூ.49,999. ஆனால், தீபாவளி அமேசான் ஆஃபரில் இஹ்து வெறும் ரூ.36,499க்கு கிடைக்கிறது. அதாவது ரூ.13,000 தள்ளுபடியில் இதை வாங்கலாம்.  இதிலும், ஐசிஐசிஐ, கோட்டக் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி கூடுதலாக ரூ.1500 சலுகை பெறலாம். கோட்டக் வங்கி கார்டுகளுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ சலுகை உண்டு. இந்த நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையைப் பயன்படுத்தி வட்டியில்லா மாதத் தவணையில் நீங்கள் டேப்ளட்டைப் பெறலாம். எக்ஸ்சேஞ் ஆஃபரில் ரூ. 15,000 முதல் ரூ.25,000 வரை சேமிக்கலாம்.


இந்த டேபில் 12.4 இன்ச் திரை, 4 GB RAM and 64 GB ஸ்டோரேஜ் உள்ளது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு உதவியுடன் 1TB வரை விரிவாக்கம் செய்யலாம். ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உள்ளது. குவால்காம், ஸ்நாப் ட்ராகன் 778G ப்ராசஸர் உள்ளது. 8MP ப்ரைமரி கேமரா,  5MP செல்ஃபி கேமரா உள்ளன.  10,090 mAh பேட்டரி உள்ளது.  S-Pen ஒன்று உள்ளது. இதில் நிஜ பேணாவில் எழுதுவதைப் போலவே எழுதலாம்.