அமேசான் விழாக்கால விற்பனையில் பல்வேறு சலுகைகளும் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. HP 14 10th Gen லேப்டாப்பை ரூ.15,000 தள்ளுபடியில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.
ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தயாரிப்புகளை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருப்பது பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவை ஆகும். ஒவ்வொரு தளங்களும் தங்களது பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ஒவ்வொரு பண்டிகை தினத்துக்கும் அறிவிக்கப்படும் சலுகைகளோடு கூடுதலாக அவ்வப்போடு தள்ளுபடி தினங்கள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி தற்போது அமேசான் நிறுவனம் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை அறிவித்தது. அதன் பின்னர் மளிகைப் பொருட்களை சலுகை விலையில் அறிவித்தது. நவராத்திரி சேல் அறிவித்தது. அழகு சாதனப் பொருட்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர் அறிவித்தது.
தற்போது, HP 14 (2021) 10th Gen Intel Core i5 Laptop ப்ரீமியம் தரத்திலானது. வேகமாக இயங்கக் கூடியது. கேமிங், கோடிங்குக்கு ஏற்ற வேகம் இருக்கும். இதில் தள்ளுபடி மட்டுமல்ல, கேஷ்பேக், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளன.
இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்:
* எடை குறைவானது. சில்வர் நிறத்திலானது. ஒரிஜினல் விலை ரூ.77,996. ஆனால் ஆஃபரில் ரூ.64,990. எம்ஆர்பியில் இருந்து நேரடியாக ரூ.13,000 குறைவு.
* ஆக்சிஸ் வங்கி, இண்டஸ் இண்ட் வாங்கி, சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மீது ரூ.1,500 கேஷ்பேக் கிடைக்கும். இந்த ஆஃபரும் சேர்ந்தால் லேப்டாப்பின் விலை ரூ.63,490க்கு விற்கப்படுகிறது.
* எக்ஸ்சேஞ் ஆஃபரில் ரூ.18,350 மிச்சப்படுத்தலாம். ஆனால், உங்கள் பழைய லேப்டாப்பில் நிலையைப் பொருத்து இந்தச் சலுகை மாறலாம்.
சிறப்பம்சங்கள்:
* இந்த லேப்டாப் HP 14s-er0503TU சீரிஸ் வகையைச் சேர்ந்தது. இதில் பயனாளர் சிம் கார்டை இன்சர்ட் செய்து இணைய டேட்டா பெறலாம்.
* FHD மைக்ரோ எட்ஜ், ஆன்ட்டி கிளேர் டிஸ்ப்ளே, 14 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் ஆகியன உள்ளன
* விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. 10th Gen Intel core i5-1035G1 பிராசஸர் உள்ளது.
* 8 GB DDR4-2666 SDRAM RAM உள்ளது. இதனை 16 ஜிபி ஆக அதிகரித்துக் கொள்ளலாம். ஸ்டோரேஜ், 512 ஜிபி.
* 3 செல் லித்தியம் இயான் பேட்டரி உள்ளது.
* இரண்டு யுஎஸ்பிக்களும், 3.0 போர்ட்டுகளு, 1 HDMI போர்ட்டும் உள்ளது.