அட்சய திருதியை வந்துவிட்டால் போதும், தமிழகத்தில் நகைக்கடைகளில் மக்கள் கூட்டமும் வியாபாரமும் சக்கைப்போடு போடும் என்பது அண்மைக்காலங்களில் எழுதப்படாத விதி. கொரோனா காலக்கட்டங்களில் கூட, அட்சயதிருதியை நாளில் நகைகள் விற்பனை பெரிய அளவுக்கு பாதிப்பு அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் - அட்சய திருதியை ஆஃபர்
சிறப்பு நாளாக கொண்டாடப்படும், அட்சய திருதியை, நாளையும் நாளை மறுநாளும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் செயல்படும் பெரிய நகைக்கடைகள் முதல் சிறிய நகைக் கடைகள் வரை அனைத்துமே அவரவர் வசதிக்கு ஏற்ப சலூகைகளை அள்ளி வழங்குகின்றனர். உதாரணமாக, சென்னையின் பிரபலமான ’தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸில்’, நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். 24-ம் தேதி வரை, பவுனுக்கு 1000 ரூபாய் தள்ளுபடி என அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏ.சி. உள்ளிட்ட மேலும் சில பொருட்களுக்கும் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் போன்றே, பல்வேறு இடங்களில், பல்வேறு நகைக் கடைகளும் சலுகைகளைக் கொடுத்து வருகின்றனர்.
அட்சய திருதியை கொண்டாட்டம்:
அட்சய திருதியை நாளை சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அட்சய திருதியை இருக்கிறது. எனவே, நாளையும் நாளை மறுநாளும் நகைக்கடைகள் காலை முதலே இயங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பொதுவாக அட்சயம் என்பதற்கு குறையாமல் இருப்பது, தொடர்ந்து வரக்கூடியது என பொருள்படும். அந்த வகையில், அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் வாங்கினால், குறைவில்லாமல் தொடர்ந்து வாங்குவோம் என்று நம்பப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்புவரை, அட்சய திருதியையும் மற்றொரு நாளாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், நகைக்கடைகளில் ஆரம்பித்த இந்த சலுகை அறிவிப்பு தற்போது பல சரக்கு கடைகள் வரை விரிந்து பரந்துள்ளது. இந்த நாளில், எது வாங்கினாலும் பெருகும், தொடரும் என்ற வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, கடைகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து, வியாபாரத்தில் மற்றுமொரு தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ்ஸாக மாற்றிக் கொள்கின்றனர்.
குறிப்பாக, நகைக்கடைகளில், தங்கத்திற்கு மட்டுமல்ல, வெள்ளி, பிளாட்டினம் என அனைத்து வகைகளுக்கும், வகைவகையாக சலுகைகளைத் தருகின்றனர். நகைகள் மட்டுமல்ல தங்க காசு, வெள்ளிக் காசு வாங்குவதும் விசேஷமாக கருதப்படுகிறது. அதுவும், இந்த ஆண்டு, கொரோனாவின் பாதிப்பு பெரிய அளவு இல்லாததால், அதிக அளவு விற்பனை இருக்கும் என்று நகை வியாபாரிகள் கருதுகின்றனர். சாதாரணமாக நடக்கும் விற்பனையை விட, 3 மடங்கு அதிக விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரிய கடைகளில் விற்பனை வெகு ஜோராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன வாங்கலாம்?
அட்சய திருதியை தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம் என்று கூறப்படுகிறது. அது தங்கம்,வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. பச்சரிசி, உப்பு, வெல்லம், ஆகியவற்றையும் வாங்கலாம்.
தானம் தருவது நல்லதா?
அட்சய திருதியை நாளில் தானம் தருவது நல்லதாக என்று கேட்டால், ஆம். நன்மைதான். உணவு தானியங்கள், தண்ணீர் நிறைந்த குடம் உள்ளிட்டவற்றை தானமாக கொடுத்தால் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. அதோடு, இந்த சிறப்பு நாளில் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் செய்யக்கூடிய காரியங்கள்.
குழந்தைக்கு அன்னப் பிராசனம் செய்வது.
சங்கீதம், கல்வி, கலைகள் உள்ளிட்ட பயிற்சிகளில் சேரலாம்.
இன்றைய தினத்தில் நல்ல எண்ணத்துடன் மன மகிழ்வுடன் நல்ல செயல்களை தொடங்கலாம்.