நான் சீருடைகள் மற்றும் சேலைகளை அணிந்து வளர்ந்தவள். கடலின் அலைகள் நகர்ந்துகொண்டே இருந்தாலும், நங்கூரம் கப்பலை இழுத்துப் பிடிப்பது போல, என் தந்தை பணியாற்றிய கடற்படையின் ஒழுக்கம் என் வாழ்கைக்கு நங்கூரமாக மாறியது.
பள்ளி ஆசிரியையான என் அம்மா, அறிவும் பொறுப்பும் நிறைந்த தன் உலகத்தை எப்போதும் புடவையிலே போர்த்திக் கொண்டு இருந்தார். அது தான் அவரது அழகின் அடையாளம். என் பாட்டியும் இராணுவ அதிகாரியின் மனைவி. அவருக்கு சேலை ஒரு கவசமாகவும், பெருமையாகவும் இருந்தது.
பாரம்பரியத்தின் உணர்வு:
இப்படி என் தாத்தா மற்றும் அப்பா வேலை நிமித்தமாக புதிய ஊர்களுக்கு மாறும்போதெல்லாம், அந்தந்த ஊர்களின் உடைகள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியது. ஒவ்வொரு சேலையும் அவர்கள் சென்ற இடங்களையும், அவர்களுடன் இருந்த நினைவுகளையும் பிரதிபலித்தது. ஆரம்பத்தில் சேலைகளை பார்த்து வியந்த நான், பின்னர் சேலைகளின் மீது காதல் கொண்டேன். பின்னர் அது நமது பாரம்பரியத்தின் ஒரு உணர்வாக எனக்குள் மாறியது.
ARS-ஐ ஆரம்பிப்பதற்கு முன், நான் ஒரு ஸ்டைலிஸ்டாக வேலை செய்தேன். அப்போது ஆடைகள் எப்படிப் பொலிவாகவும், உயிர்ப்புடனும் உருவாக்கப்படுகின்றன என்பதைக் கற்றுக் கொண்டேன். அந்த அனுபவம் எனக்கு நுணுக்கமான விஷயங்களையும், துணியின் தன்மையையும், வடிவத்தையும் நன்கு அறிந்து கொள்ள கற்றுத்தந்தது. அதுவே இன்றும் ஒவ்வொரு கலெக்ஷனையும் தேர்ந்தெடுக்கும்போது எனக்கு வழிகாட்டுகிறது.
பாரம்பரியத்திற்கான மரியாதை:
ARS அந்த பாரம்பரியத்திற்கான ஒரு மரியாதை. ARSன் ஒவ்வொரு கலெக்ஷனும் இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை இன்றைய உலகம் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காலத்தால் மாறாத, பல்வேறு முறைகளில் அணியக்கூடிய, உங்களுக்கே உரியதாக உணரக்கூடிய ஆடைகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, இது பாரம்பரியத்திற்காக அணிவது மட்டுமின்றி, நம் பெருமையையும் முன்னோக்கி எடுத்துச் செல்வது ஆகும்.
Buy here.
Follow ARS on Instagram