இந்தியாவின் நிலையான பிராட்பேண்ட் (Fixed Broadband) சேவை அனுபவம் குறித்த புதிய அறிக்கையை Opensignal வெளியிட்டுள்ளது. இதில் Airtel, BSNL மற்றும் Jio ஆகிய நிறுவனங்களின் சேவைகள், நம்பகத்தன்மை, சீரான தரம், பதிவிறக்க வேகம், பதிவேற்ற வேகம் மற்றும் வீடியோ அனுபவம் ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் ஒப்பிடப்பட்டுள்ளன.
முக்கியஅம்சங்கள்
- இந்தியாவின்சிறந்தவீட்டுஇணையசேவையாக Airtel தேர்வுசெய்யப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை, சீரான தரம், பதிவிறக்க வேகம், பதிவேற்ற வேகம் மற்றும் வீடியோ அனுபவம் என ஒட்டுமொத்த அனுபவத்திற்கான ஐந்து பிரிவுகளிலும் Airtel முதலிடம் பிடித்துள்ளது.
- ஒட்டுமொத்தநம்பகத்தன்மையில் Jio-வைவிட Airtel 15% முன்னிலைபெற்றுள்ளதுடன், ஒட்டுமொத்தஇணையவேகத்திலும் 26–27% முன்னிலைபெற்றுள்ளது. 100 முதல் 1,000 வரையிலான நம்பகத்தன்மை அளவீட்டில் Jio 423 புள்ளிகளைப் பெற்ற நிலையில், Airtel 486 புள்ளிகளைப் பதிவு செய்து 63 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது. இணைய வேகத்தைப் பொறுத்தவரை BSNL நெருக்கமான இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பதிவிறக்க வேகத்தில் Airtel-ஐ விட 0.5 Mbps மட்டுமே பின்தங்கிய BSNL, பதிவேற்ற வேகத்தில் 0.8 Mbps பின்தங்கியுள்ளது.
- சிறந்த Fixed Wireless வீட்டுஇணையசேவையாகவும் Airtel தேர்வுசெய்யப்பட்டுள்ளது. Fixed Wireless Access (FWA) சேவைக்கான ஐந்து பிரிவுகளிலும் Airtel முதலிடம் பெற்றுள்ளது. Airtel-ன் பதிவிறக்க வேகம் 32.4 Mbps ஆகவும், பதிவேற்ற வேகம் 20.7 Mbps ஆகவும் பதிவாகியுள்ளது. Jio-வின் 25.7 Mbps பதிவிறக்க வேகம் மற்றும் 17.1 Mbps பதிவேற்ற வேகத்துடன் ஒப்பிடும்போது, Airtel முறையே 6.7 Mbps மற்றும் 3.6 Mbps முன்னிலையில் உள்ளது.
- FWA சேவையின்சீரானதரம்மற்றும்நம்பகத்தன்மையிலும் Jio-வைவிட Airtel முன்னிலையில்உள்ளது. Airtel-ல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு (66.2%) சீரான தரத்திற்கான அளவுகோல்களை எட்டியுள்ளன. Jio-வில் இது 55.0% ஆக இருந்தது. இரு நிறுவனங்களுக்கும் இடையிலான வித்தியாசம் 11.2 சதவீதப் புள்ளிகள். FWA நம்பகத்தன்மையில் Airtel 450 புள்ளிகளைப் பதிவு செய்த நிலையில், Jio 382 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் Jio-வை விட Airtel 68 புள்ளிகள் அல்லது 18% முன்னிலை பெற்றுள்ளது.
