இந்தியாவில் மிகப்பெரிய தொழில்நிறுவனங்களில் ஒன்று அதானி குழுமம். அந்த குழுமத்தின் சமையல் எண்ணெய் நிறுவனமான அதானி வில்மார் நிறுவனத்தின் பங்குகள் இன்று பங்குச் சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது.  இந்தப் பங்குகளின் ஐபிஓ விற்பனை இன்று முதல் தொடங்க உள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தின் 12.3 கோடி பங்குகள் இன்று முதல் பங்குச்சந்தையில் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இந்தப் பங்குகள் மூலம் சுமார் 212.9 கோடி ரூபாய் நிதியை திரட்ட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 


அதானி வில்மர் எண்ணெய் நிறுவனம் 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது அதானி மற்றும் வில்மர் ஆகிய இரண்டு நிறுவனங்களுடைய கூட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சமையல் எண்ணெய், கோதுமை மாவு, பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் உணவு பொருட்கள் தொடர்பான விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆகவே இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு அதிகமான வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. 




இந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்பாக சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில், "உணவு பொருட்கள் தொடர்பான விற்பனையில் அதானி வில்மார் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் பங்குகள் தொடக்கத்தில் 250 முதல் 260 ரூபாய் வரை விற்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் இந்த பங்குகளில் லிஸ்டிங் ப்ரீமியம் 15 சதவிகிதம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் இந்தப் பங்குகளின் லிஸ்டிங் மதிப்பு 5-10 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். 


அதன்படி அதானி வில்மர் நிறுவனத்தின் பங்குகளுக்கு இன்று 30 ரூபாய் ஜிஎம்பி உள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்குகள் இன்று (230+30) 260 ரூபாய் மூலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு விதிக்கப்பட்ட விலை மதிப்பைவிட 13 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் சில மாற்றங்களும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பங்குச்சந்தை நேற்று இறக்கத்துடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தெரியுமா?