அக்‌ஷய திரிதியை  நாளில் தங்கம் வாங்கினால் அவர்களுடைய செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். ஆகவே அக்‌ஷய திரிதியையை முன்னிட்டு தங்கம் வாங்க நேற்று காலை முதல் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஏனென்றால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஆன்லைன் முறையில் தங்கம் விற்பனை நடைபெற்றது. எனவே நேற்று அக்‌ஷய திரிதியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 


அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 35 ஆயிரம் நகைக்கடைகளில் நேற்று தங்கம் விற்பனை வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பாக இருந்த தங்க விற்பனையைவிட தற்போது கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு மிகவும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி சுமார் 25-30 சதவிகிதம் வரை தங்க விற்பனை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.  இந்த வாரம் தங்கத்தின் விலை சற்று குறைந்தது தங்க விற்பனை அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்தது. 


கடந்த வாரம் 10 கிராம் ஆபாரண தங்கம் 54 ஆயிரம் ரூபாயக்கு விற்கப்பட்டு வந்தது. அந்த விலை இந்த வாரம் சற்று குறைந்து 51,340 ரூபாயாக உள்ளது. அத்துடன் வரும் ஜூலை வரை பல திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதன் காரணமாக இம்முறை அக்‌ஷய திரிதியைக்கு அதிகளவில் தங்கம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண