ஜவஹர்லால் நேரு 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்தார். அவர் இந்தியாவின் நீண்ட கால பிரதமராக இருந்தவர். அவர் 1947ல் சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரம் பெற்ற தருணத்தைக் கொண்டாட மகாத்மா காந்தி அங்கு இல்லை. அவர் கொல்கத்தாவில் நடந்து கொண்டிருந்த கலவரத்தை ஒடுக்க போராடிக் கொண்டிருந்தார்.


கடினமான காலத்தில் எல்லாம் காந்தியிடம் அறிவுரை பெற்றே இயங்கிய நேருவுக்கு அவரது படுகொலை பெரிய வெற்றிடத்தை விட்டது. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை மோதல், காந்தி மறைவு, மத மோதல்கள் என்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே தான் நேரு இந்தியாவை கட்டமைக்க வேண்டியிருந்தது.


நேருவின் முன்னால் இருந்த சவால் மிகப்பெரியது. காலனி ஆதிக்கத்தில் இருந்து மீளத் தொடங்கிய நாடுகள் எல்லாவற்றிற்குமே ஒவ்வொரு விதமான சவால் இருந்தன. ஆனால் நேருவின் முன்னால் இருந்த சவால் மிகவும் பெரியது. 30 கோடி மக்கள் தொகை கொண்டிருந்தது இந்தியா. அந்த மக்கள் கிராமம், நகரம் பெருநகரம் என பிரிந்து வாழ்ந்தன. சாதி, மதம், தாய்மொழி, கலாச்சாரம், சமூக பொருளாதார நிலைப்பாடு என அவர்களுக்கு இடையேயான பிரிவுகள் மிகவும் ஆழமானது.


200 ஆண்டுகளாக ஆங்கிலேய ஆட்சியின் சுரண்டலில் அடிமைப்பட்டுக் கிடந்ததால் பெரும்பாலான மக்கள் வறுமையின் பிடியில் இருந்தனர். அப்போது இந்தியா ஆங்கிலேயே நெடியுடன் பெற்றிருந்த அரசியல் அமைப்புகளும் வெவ்வேறு சூழலுக்கு உருவாக்கப்பட்டவையாக இருந்தது. அந்தச் சூழலில் தான் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க வேண்டியிருந்தது. நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் ஒவ்வொருவரின் கருத்துகளையும் உள்வாங்கி ஆலோசித்து இறையாண்மை பொருந்திய ஜனநாயக குடியரசு உருவக்கப்பட்டது.


வெவ்வேறு மதம், இனம், மொழி போல் இந்தியாவில் இன்னும் நிறைய பிரத்யேக தன்மைகள் இருந்தன. இந்திய 562 குறுநிலங்களாக பல்வேறு மரபுவழி மன்னர்கள், ஆட்சியாளர்கள் கீழ் இருந்தது. அவற்றில் பெரும்பாலான குறுநில மன்னர்கள் விரும்பாவிட்டாலும் கூட இந்தியா என்று ஒட்டுமொத்தமாக உருவெடுக்க தயாராக வேண்டியிருந்தது. இந்திய வரலாற்று மாணவர்களுக்கு இதனை இந்திய குறுநிலங்களின் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் கற்றுத்தருகின்றனர். இந்தியாவை ஒருங்கிணைப்பது என்பது நேருவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பிரமாண்ட சவாலாக இருந்தது.


நேரு பிரதமராக ஆட்சி செலுத்திய 17 நீண்ட காலத்தில் உலக அரங்கில் இந்தியாவை ஒருங்கிணைத்துக் காட்டுவதில் பல்வேறு வாகைகளும் சில, பல சறுக்கல்களும் வந்து சென்றன. இந்தியாவின் முதல் தேர்தல் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி நடந்தது. அந்தக் காலச் சூழலில் அந்தத் தேர்தல் அதி பிரமாண்ட பணி. உலகம் கண்டிராத பிரமாண்ட ஜனநாயகத் திருவிழா அது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு ஊடே நடந்த அந்தத் தேர்தல் வரலாற்று சாதனை தான். அப்போது வாக்களிக்க தகுதியான 10 .6 கோடி மக்களில் சுமார் 45 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியிருந்தனர். 1951ல் நாட்டின் கல்வியறிவு வீதம் வெறும் 18 சதவீதம் தான்.


காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையான பின்னர் முதல் தேர்தல் 1952லும், இரண்டாவது தேர்தல் 1957லும் மூன்றாவது தேர்தல் 1962லும் நடத்தப்பட்டன. 1964 மே மாதம் நேரு இயற்கை எய்தினார். அதற்குள் 3 தேர்தல்கள். காலனி ஆதிக்கத்திலிருந்த விடுபட்ட வேறு எந்த நாடும் அதனை அப்போது செய்திருக்கவில்லை. இது நேருவில் தனிப்பட்ட விருப்பத்தால் நடந்தது என்று கொண்டாலும் கூட அவர் 8 முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியிருக்கிறார். 1959ல் கேரளாவில் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைத்தார். கேரள ஆட்சிக் கவிழ்ப்பு நேருவின் கருத்து வேறுபாடுகள் மீதான சகிப்பின்மைக்கு அடையாளமாக இன்றும் கூறப்படுகிறது.


பிரிட்டிஷ் வழிவந்த அரசமைப்புகளை நேரு வளர்த்தெடுத்தார்:


இந்தியா தனது நாடாளுமன்ற அமைப்புகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்தே மரபு போல் பெற்றிருந்தது. நேரு காலத்தில் அது இன்னும் வளர்த்தெடுக்கப்பட்டது. சில நேரங்களில் இந்தியத் தன்மைக்கு பொருத்துப் போகும் வகையில் திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜனநாயக அமைப்புகள் ஸ்திரத்தன்மையையும், முதிர்ச்சியையும் கொண்டிருந்தன. நீதிமன்றங்கள் சுதந்திரமாக இயங்கின. அதேபோல் ஊடகங்களும் தடைகளின்றி சுதந்திரமாக இயங்கின.


நேரு காலத்தில் லோக்சபாவில் விவாதங்கள் இயல்பாக நடைபெற்றன. காங்கிரஸுக்கு அருதி பெரும்பாண்மை இருந்தாலும் கூட எதிர்க்கட்சிகள் தங்கள் உரிமையை நிலைநாட்டின. நேருவும், அமைச்சர்களும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தியாவின் முதல் தேர்தலுக்கு முன்னரே தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. அது தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்தது. இந்த பண்புகளால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்திலேயே சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான், டச் ஆட்சியில் இருந்து விடுபட்ட இந்தோனேசியா போன்ற நாடுகளை விட இந்தியா ஸ்திரத் தன்மையுடன் இருந்தது. 
 
மத மோதல்களை தடுப்பதில் நேருவின் பங்கு:


நேருவின் ஆட்சியின் கீழ் இந்தியா மத மோதல்களே இல்லாமலே இருந்தது என்று கூற முடியாது. 1948ல் பிரிவினையின் போது நடந்த மதக் கொலைகள் குறைந்தது என்றாலும் ஆங்காங்கே அவ்வப்போது மோதல்கள் இருந்தன. பெரும்பாலானவை சிறிய மோதல்கள் தான். 1961ல் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்தது தான் பெரிய மோதல். அங்கே முஸ்லீம் சமூகத்தினர் தொழில் முனைவோராக வெற்றிகரமாக வளர்ச்சி காண அது பெரும்பாண்மை இந்து சமூகத்தை சோர்வடையச் செய்தது. அவர்களின் சோர்வு பதற்றமாக அது மோதலானது.


நேரு மத மோதல்களை எப்படி கட்டுப்படுத்தினார் என்பதை அமெரிக்க எழுத்தாளர் நார்மன் கசின்ஸ் நன்றாக விவரித்திருப்பார். நேரு மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கான மாண்பு சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். மதம், சாதி, பாலினம், பொருளாதார பின்னணி, சமூகப் பின்னணி என எதன் பின்னணியிலும் யாரும் ஏற்றத்தாழ்வை சந்திக்கக் கூடாது என நினைத்தார்.


சில விமர்சகர்கள் நேரு ஆட்சியின் கீழ் தலித்துகள் முன்னேற்றத்திற்கு கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். ஆனால் உற்று நோக்கினால் அது உண்மையல்ல என்றே சொல்லலாம். தலித்துகள் முன்னேற்றம் என்பது பி.ஆர்.அம்பேத்கர் கண்ட கணவைவிட குறைந்த வேகத்தில் தான் நடந்தது. இன்றும் கூட அந்த வகையில் அவர்களுக்கான முன்னேற்றத்தை உறுதி செய்வதில் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.


நேருவின் ஆட்சியின் கீழ் இந்தியா ரொம்பவே நேசமிகு வரவேற்கும் நாடாக இருந்தது. வந்தாரை போற்றியது. நேருவிடம் சகிப்பின்மை இருந்திருக்கலாம். அவர் கொஞ்சம் அதிகார தொனியிலும் இருந்திருக்கலாம். ஆனால் அவர் வளர்த்தெடுத்த இந்தியா பெருமைமிக்கதாக வளர்ந்தது. அவருடைய அரசியல் தேர்வுகள் பாராட்டைப் பெற்றன. கலாச்சார ரீதியாகவும் தேசத்தை வளர்த்தெடுத்தார். கலை, இசை, நடனம், இலக்கியம் என எல்லாவற்றையும் மேம்படுத்தினார்.


இந்தியாவை அறிவியலின் சக்தி பீடமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக ஐஐடி காரக்பூர் (1951), ஐஐடி பாம்பே (1958), ஐஐடி மெட்ராஸ் (1959), ஐஐடி கான்பூர் (1959) மற்றும் ஐஐடி டெல்லி (1961) என்று நிறுவப்பட்டன.  டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என பல்வேறு பெருமைமிகு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.


நேருவின் மதச்சார்பின்மை..


நேருவின் மதச்சார்பின்மை மதத்தை மறுக்கவில்லை. நேரு ஆங்கிலேயே மனப்பாங்கில் இருந்ததால் அவருக்கு மதங்கள் மீது மதிப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பொது வாழ்வில் மத வழிபாட்டுத் தலங்களை அவர் என்று புறக்கணித்தது இல்லை. இழிவாகப் பேசியதும் இல்லை. அவர் மதத்தை மறுக்கவில்லை. ஆனால் இந்தியாவை இந்து தேசமாக உருவாக்குவதை எதிர்த்தார். அதனால் தான் 1951ல் சோம்நத் கோயில் மறுசீரமைப்புக்குப் பின்னர் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டபோது திகைத்தார்.


நேருவின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளும் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரதிநிதித்துவம் கிடைக்கவிருந்த சூழலை பெரிதாக மதிக்கவில்லை. விளைவு 1962ல் சீன ஆக்கிரமிப்பை சந்திக்க நேர்ந்தது. சீன ஆக்கிரமிப்பால் வந்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் 16 மாதங்களுக்குப் பின்னர் மாரடைப்பில் உயிரிழக்கக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
 .
1948 ஜனவரி 30ல் காந்தி படுகொலைக்குப் பின்னர் நேரு இந்தியாவிலும் உலக அரங்கிலும் பிரபலமான முகமானார் அவர் மேற்கத்திய கலாச்சாரம் கொண்டவராகவும் பழகுதற்கு இனியவராகவும், கற்றறிந்தவராகவும் இருந்தார். ஆனால் அவருடைய வெளிநாட்டு நட்பு வட்டங்கள் எல்லாமே அவருடைய சிந்தையில் ஒருவித கேத்தஹாலிஸம் இருந்ததாக விமர்சனங்களை பெறச் செய்தது.
  
நேருவின் கீழ் இந்தியாவைப் பற்றி பேசும் போது காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட நாடுகளுடன் அவர் ஏற்படுத்திய உறவுகள் பற்றியும் பேச வேண்டும். ஒருவிதத்தில் அதுவும் கூட இன்று தெற்கு உலகு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது எனலாம். 1955ல் நடந்த பாண்டுங் மாநாட்டில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை ஒருங்கிணைப்பதில் நேரு முக்கிய பங்காற்றினார். பனிப்போரின் போது நேரு அமெரிக்காவின் பக்கமும் நிற்கவில்லை, சோவியத் யூனியன் பக்கமும் நிற்கவில்லை. அவருடைய ஒத்துழையாமை சிந்தனை காந்திய பார்வையில் இருந்து பிறந்தது என்றால் அது மிகையாகாது.  


(கட்டுரையாளரின் கருத்துக்கள் சொந்த கருத்துக்கள். இக்கட்டுரைக்கான அனைத்து வகை விமர்சனங்களும் கட்டுரையாளரைச் சாரும்)