கரூரில் மூன்று வேளை உணவு வழங்கும் தளபதி கிச்சன் திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று இரண்டாவது அலை பெரும்பாலான மக்கள் பாதித்து வரும் நிலையில் கரூரில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு மூன்று வேளை உணவு 100 நபர்களுக்கு வழங்கும் திட்டத்தை கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே இத்திட்டத்தை மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.