2021 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 45 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக, சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது எந்த வருடமும் பதிவு செய்யப்படாத "குறைந்த இறப்பு எண்ணிக்கைகளில் இது ஒன்றாகும்”.


இது போன்று இரண்டு வாரங்களுக்கு முன்பு மற்றொரு ஊடகம் 46 பத்திரிகையாளர்கள்  கொல்லப்பட்டதாக தெரிவித்தது. இதுவே 1995ஆம் ஆண்டுக்கு பிறகு மிகக் குறைவானது என்றும் குறிப்பிட்டிருந்தது.


இந்த குறைவு வரவேற்கத்தக்க என்றாலும், தொடர்ந்து வன்முறையை எதிர்கொள்வதில் இது ஒரு சிறிய ஆறுதல்" என்று பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட IFJ அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானில் 9 பத்திரிகையாளர்களும் மற்ற நாடுகளான மெக்சிகோவில் 8 பத்திரிகையாளர்களும், இந்தியாவில் 4 பேரும், பாகிஸ்தானில் 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.


ஊடகப் பணியாளர்கள் "சமூகங்கள், நகரங்கள் மற்றும் நாடுகளில் ஊழல், குற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தியதற்காக பெரும்பாலும் கொல்லப்படுகிறார்கள்" என்று IFJ தெரிவித்துள்ளது.


கணக்கின்படி ஆப்கானிஸ்தானை உள்ளடக்கிய ஆசிய-பசிபிக் பிராந்தியமானது 20 கொலைகளுடனும், அமெரிக்கா 10 கொலைகளிடனும், ஆப்பிரிக்கா 8 கொலைகளுடனும், ஐரோப்பா 6 கொலைகளிடனும், மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகள் 1 மட்டுமே. மேலும் ஈரானில் ஒரு "கொடிய விபத்தில்" இரண்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதையும் IFJ குறிப்பிட்டுள்ளது.



குற்றக் கும்பல், போதைப்பொருள் கடத்தல்கள், அச்சுறுத்தல்களில் மெக்ஸிகோ, ஐரோப்பியா, நெதர்லாந்டில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பத்திரிகையாளர்களின் கொலைகளை உறுதிப்படுத்தவும், பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் IFJ பொதுச்செயலாளர் அந்தோனி பெல்லங்கர், ஐ.நா. மாநாட்டிற்கு தனது அமைப்பின் ஆதரவை தெரிவித்துள்ளார்.