இந்தியா நாடு சுதந்திரம் அடைந்த இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொண்டாட்டங்களை கடந்த ஓராண்டாக செய்து வந்தன. அத்துடன் பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆசாதி கா அமிர்த மகோத்சவ் என்ற பெயரில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக சுதந்திர தினம் தொடர்பான கொண்டாட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பதற்காக  ‘ஹர் கர் திரங்கா’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இதற்காக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த இயக்கத்திற்கு ஆதவராக தங்களுடைய இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றினர். 


இந்தச் சூழலில் தேசிய கொடி தொடர்பான வரலாற்றை சற்று பின் நோக்கி பார்க்க வேண்டும். இந்திய தேசிய கொடி இந்திய மக்கள், மாநிலங்கள் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பிரதிபளிக்கும் வகையில் இருக்கிறது என்று சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். அதில் குறிப்பாக சிலர் தேசிய கொடியிலுள்ள ஆரஞ்சு நிறம் இந்துகளையும், பச்சை நிறம் இஸ்லாமியர்களையும், வெள்ளை நிறம் மற்றவர்களை குறிக்கும் என்று நினைத்தனர். இந்த தேசிய கொடியின் வடிவம் தொடர்பாக மகாத்மா காந்தியடிகள் தன்னுடைய யங் இந்தியா பத்திரிகையில் ஒரு முறை குறிப்பிடித்திருந்தார். 


அதன்படி தேசிய கொடியில் உள்ள சக்கரம் என்பது இந்தியாவிலுள்ள அனைத்து மக்களின் நிலையை குறிக்கும் வகையில் உள்ளது என்று கூறியிருந்தார். இந்திய அரசியல் நிர்ணய சபை 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி தேசிய கொடியை ஏற்று கொண்டது. அப்போது அவர்கள் இந்த வடிவத்திற்கு வேறு ஒரு விளக்கத்தை அளித்தனர். அதாவது பூமி தாயை குறிக்கும் வகையில் ஆரஞ்சு நிறமும், பச்சை நிறம் இயற்கையையும் குறிக்கும் என்று தெரிவித்திருந்தனர். 




அமெரிக்கா,கனடா போன்ற மற்ற நாடுகளைவிட இந்தியாவில் தேசிய கொடிக்கு என்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. அனைவரும் தங்களுடைய இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற கொடியின் கோட்பாடுகள் 2022(Flag Code of India 2022) என்ற விதிகள் செயல்பட்டு வருகின்றன. இதன்காரணமாக தற்போது கூட தேசிய கொடியை சூர்ய உதயத்திலிருந்து சூர்ய அஸ்தமனம் வரை மட்டும் ஏற்றி வைக்க முடியும்.  இதன்காரணமாக சாதாரண மக்களிடம் இருந்து தேசிய கொடிக்கும் இடையேய பெரிய இடைவெளி இருந்தது. இதை போக்கி நோக்கத்தில் மக்களை கொடியுடன் இணைக்கும் வகையில் இந்த ஹர் கர் திரங்கா என்ற இயக்கம் அனுசரிக்கப்பட்டது. 


இந்திய அரசியலமைப்புச் சட்டம் தேசிய கொடி தொடர்பாக எதையும் சொல்லவில்லை. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வி.என்.காரே 2004ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் அரசியலமைப்புச் சட்ட பிரிவு 19(1)(ஏ)-ன்படி தேசிய கொடி ஏற்றுவது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று தெரிவித்திருந்தார். மக்களுடைய கருத்து உரிமைகளில் இதுவும் ஒன்று சுட்டிக்காட்டியிருந்தார். அவர் அப்போது கூறியிருந்தது தற்போது மக்கள் அனைவருக்கும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மக்கள் அனைவரும் தங்களுடைய இல்லங்களில் உரிய மரியாதையுடன் தேசிய கொடியை ஏற்றுவார்கள் என்று கருதப்படுகிறது. 


பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகளாகும். இதற்கும் ஏபிபி நாடுவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.