இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகனங்களில் ஒன்று Yezdi. இந்த Yezdi நிறுவனம் பல்வேறு இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இவர்களின் Yezdi Scrambler பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

Continues below advertisement

Yezdi Scramble:

இந்த Yezdi Scrambler பைக்கில் 3 வேரியண்ட் உள்ளது. 

1.  Scrambler Legacy Black - ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரத்து 730

Continues below advertisement

2. Scrambler Rogue Red and OG Yellow - ரூபாய் 2 லட்சத்து 49 ஆயிரத்து 857

3. Scrambler Rally Blue - ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்து 991

எஞ்ஜின்:

இந்த பைக் கருப்பு, மஞ்சள், சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் உள்ளது. இந்த பைக்கில் 334 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.   இதில் 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை 174 கிலோ ஆகும்.

29.56 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 30 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் பொருத்தப்பட்டுள்ளது. சாலை, ரெயின் மற்றும் ஆஃப் ரோட் மோடில் இந்த பைக் உள்ளது. 1 சிலிண்டர், லிக்யூட் கூல்ட், 4 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்ட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க்  வித் ரப்பர் பெல்லோ முன்பக்க சஸ்பென்சனும், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர் வித் 5 ஸ்டெப் அட்ஜஸ்டெபிள் ப்ரீலோட் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரீப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் உள்ளது. எரிபொருள் குறைந்தால் எச்சரிக்கும் அலார்ம் உள்ளது. ஹைபீம் இண்டிகேட்டர், எஞ்ஜின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர், கால்/ எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. 

எல்இடி முகப்புவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. டிஆர்எல்எஸ் வசதி உள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி-யில் பொருத்தப்பட்டுள்ளது. 

மைலேஜ்:

இந்த பைக் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த பைக் மிகவும் நீண்ட தூரம் செல்வதற்கு மிகவும் உகந்தது ஆகும். இந்த பைக்கின் ரேடியேட்டர் வெளியே 69 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சிங்கிள் பாட் ஆக உள்ளது.  

இந்த பைக்கின் வசீகரமான தோற்றமும், கம்பீரமான தோரணையும் நெடுஞ்சாலையில் செல்வதற்கு மிகவும் அருமையாக இருக்கும். நெடுந்தூர பயணங்களுக்கு மிகவும் உகந்த இரு சக்கர வாகனமாக இந்த  Yezdi Scrambler உள்ளது. ராயல் என்ஃபீல்ட், ஜாவா போன்ற நிறுவனங்களுக்கு மிகவும் பக்கபலமாக இந்த Yezdi Scrambler பைக் உள்ளது. 

 


Car loan Information:

Calculate Car Loan EMI