Electric Vehicle Year End Offer: ஆண்டு இறுதியை இந்திய மின்சார கார் சந்தையில், Mahindra XUV400 மாடலுக்கு அதிகபட்சமாக 4.2 லட்சம் ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டு இறுதி சலுகை:
ஆண்டு இறுதியையொட்டி விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில், ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில், மின்சார கார்களுக்கும் தற்போது சலுகைகள் அள்ளி வீசப்பட்டுள்ளன. விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 65 ஆயிரம் ரூபாய் தொடங்கி, அதிகபட்சமாக 4.2 லட்சம் ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதம் முழுவதும் இந்த சலுகை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும்.
MG Comet:
MG நிறுவனம் கடந்த மே மாதத்தில் அறிமுகப்படுத்திய கோமெட் வாகனமானது, இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார வாகனமாக உள்ளது. இதன் தொடக்க விலை ரூ.7.98 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு, பேஸ், ப்ளே மற்றும் ப்ளஷ் ஆகியவேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், MG கோமெட் மீது ரூ.65,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் மற்றும் பணத் தள்ளுபடி ஆகியவற்றை உள்ளடக்கி இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
MG ZS EV:
சில மாதங்களுக்கு முன்பு MG நிறுவனம் ZS மின்சார காரின் விலையை குறைத்தது. வேரியண்ட்களின் அடிப்படையில், விலைக் குறைப்பு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை மாறுபட்டது. இந்நிலையில், ZS மின்சார காரின் விற்பனைய ஊக்குவிக்கும் வகையில், மொத்தமாக 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலின்படி, ZS EVக்கு ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. லாயல்டி மற்றும் கார்ப்பரேட் ஒப்பந்தங்களுடன் ரூ.50,000 வரை ரொக்க தள்ளுபடியும் உள்ளது. MG ZS EV விலையானது ரூ.23.38 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
Hyundai Kona EV:
Hyundai நிறுவனத்தின் Kona மின்சார வாகனத்திற்கு ரூ. 3 லட்சம் வரை ரொக்க தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. Kona EV மாடலின் விலை டெல்லியில் ரூ.23.84 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. 134 bhp மற்றும் 395 Nm முறுக்குவிசையுடன் 39.2 kW பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்டேண்டர்ட் ஏசி சார்ஜருடன், கோனா 6 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது மற்றும் 50 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம், 57 நிமிடங்களில் 0-80 சதவீதத்திலிருந்து சார்ஜ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா XUV400:
மகேந்திரா XUV400 விரைவில் ஃபேஸ்லிஃப்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவியின் EL மாறுபாடு தற்போது ரூ.4.2 லட்சம் வரை பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த மாறுபாடு மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (ESC) அம்சம் இல்லாமல் வருகிறது. அறிக்கைகளின்படி, XUV400 ESC பதிப்புகள் ரூ. 3.2 லட்சம் வரை கவர்ச்சிகரமான தள்ளுபடியுடன் வருகின்றன. மஹிந்திரா தொடக்க நிலை EC மாறுபாட்டிற்கு ரூ.1.7 லட்சம் வரை சலுகைகளை வழங்குகிறது.
இதேபோன்று டாடா டியாகோ மற்றும் டாடா டைகோர் மாடல்கள் மீது, அந்நிறுவனம் 1.10 லட்சம் வரையிலான தள்ளுபடிகளை அறிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI