இந்தியாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னை தினம் என்று அழைக்கப்படும் சென்னையின் 383-வது நாள் கடந்த 22ஆம் தேதி கொண்டாடப்பட்டது.  சென்னை தினத்தை  சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு நாளாக கோலாகலமாக விழா எடுத்து கொண்டாடப்பட்டது.


இந்நிலையில் சென்னை தினத்தின் ஒரு பகுதியாக பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, சென்னை மாநகராட்சி மற்றும் பூமி தொண்டு நிறுவனம் சேர்ந்து ஒரு கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி கடந்த 21ஆம் தேதி பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ‘Save the Blue Ocean’ என்ற நோக்கத்துடன் நடந்தது.




இந்த சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் யமஹா வாடிக்கையாளர், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது தொடர்பாக யமஹா இந்தியாவின் தலைவர் எசின் சிஹானா சென்னை மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்தப்படும் என்று யமஹா இந்தியா தலைவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் இளைஞர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும் யமஹா எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். 


இந்த சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல ஆணையர் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியில் பணி புரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள் 20 பேரை யமஹா இந்திய தலைவர் எய்சின் சிஹானா கௌரவம் செய்தார். அவர்கள் சென்னை மாநாகராட்சியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதற்காக இந்த கௌரவம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


சென்னை தினம் உருவானது எப்படி..? 


சமீப காலமாக சென்னையின் பெருமையைக் கொண்டாட 'மெட்ராஸ் டே’ கொண்டாடப்படுகிறது. நவீன வரலாற்றை பொறுத்தவரையில், 1639இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து  செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர். அன்றைய விஜயநகர நாயக்கர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி முறைப்படி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம்தேதி வாங்கியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதால், அந்த தினத்தை சென்னை தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கின்றனர்.


சென்னை தின வாழ்த்து:


 சென்னை தினத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “#HBDChennai! பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல் இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.


நாம் இன்று போற்றும் சிங்காரச் சென்னை ஒரு காலத்தில் சிறிய கிராமம்.  பசுமையான ஓர் அழகிய கிராமம். கூவம் அழகிய நதி. கிழக்கிந்திய கம்பெனி சென்னையை வாங்கியபிறகுதான், கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற ஆரம்பித்தது. ஏராளமான நிறுவனங்கள், ஷாப்பிங் இடங்கள் என மாற்றங்களைக் கொண்டு வந்தனர். 1688-ம் ஆண்டு, அன்றிருந்த மதராஸ் நகரை முதல் மாநகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் அறிவித்தார். சென்னைதான் நாட்டின் முதல் மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. 


Car loan Information:

Calculate Car Loan EMI