Worlds Largest Electric Ship: உலகின் மிகப்பெரிய மின்சார சொகுசுக் கப்பல் ஹல் 096 (HULL 096), 250 டன் எடையிலான பேட்டரிகள் பயன்படுத்தப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய மின்சார கப்பல்:
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்று எரிபொருள் செலவு போன்ற காரணங்களால், ஆட்டோமொபைல் துரை மின்சாரமயமாக்கலை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. சாலையில் எங்கு பார்த்தாலும் மின்சார ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், லாரிகள் மற்றும் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தான், தரையை தாண்டில் கடலிலும் மின்சாரமயம் தொடங்கியுள்ளது. ஆம், உலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மின்சார வாகனமாக, ஹல் 096 எனும் சொகுசுக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 130 மீட்டர் அதாவது 426 அடி நீளம் கொண்ட இந்த சொகுசுக் கப்பலை, பிரபல கப்பல் கட்டும் நிறுவனமான Incat கட்டமைத்துள்ளது.
பியூனஸ் அயர்ஸ் To உருகுவே பயணம்:
ஆஸ்திரேலியாவின் தஸ்மேனியாவில் வைத்து இந்த கப்பல் முதல்முறையாக பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட மின்சார வாகனமானது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் உச்சமாக மட்டுமின்றி, கடற்பரப்பில் உமிழ்வைக் குறைப்பதற்கான முக்கிய முன்னெடுப்பாகவும் உள்ளது. உருகுவே நடிகை சீனா சோரில்லாவின் பெயரை கொண்டுள்ள இந்தக் கப்பல், பியூனஸ் அயர்ஸ் மற்றும் உருகுவே இடையே இயங்கும். கப்பல் போக்குவரத்தில் சுத்தமான ஆற்றலின் புதிய யுகத்தை இது குறிக்கிறது. நடப்பாண்டின் இறுதியில் இந்த கப்பல், கடற்பரப்பில் தனது சோதனை ஓட்டத்தை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு இறுதிகட்ட உட்புற மேம்படுத்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பேட்டரி விவரங்கள்:
இந்த கப்பலின் பயணமானது பிரமாண்ட ஆற்றல் சேமிப்பு அமைப்பை மையமாக கொண்டுள்ளது. அதப்ன்படி, மணிக்கு 40 மெகாவாட் திறன் கொண்ட 250 டன் எடையிலான பேட்டரிகளை இந்த கப்பல் கொண்டுள்ளது. அதன்படி, தற்போது வரையில் அதிகப்படியான பேட்டரிகளை கொண்டு இயங்கும் கப்பல் என்ற பெருமையை கொண்டுள்ளது. இந்த பேட்டரிகளால் உருவாக்கப்படும் ஆற்றலானது, 8 மின்சார வாட்டர் ஜெட்களை இயக்க வல்லது மற்றும் ரியோ டி லா பிளாட்டா முழுவதையும் 90 நிமிடங்களில் பயணிக்க முடியும். சேவையின் போது பிரச்னைகளை தவிர்க்க, கப்பல் இயங்கும் இரு முனைகளில் சார்ஜிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஹல் சொகுசு கப்பலில் உள்ள அம்சங்கள்:
கப்பலில் 24 ஆயிரத்து 757 சதுர அடி பரப்பளவிலான வணிக சில்லறை விற்பனை தளத்தை கொண்டுள்ளது. கப்பலில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஷாப்பிங் தளமாக இது உருவெடுத்துள்ளது. இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 100 பயணிகளுடன் 225 வாகனங்களையும் ஏற்ற முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கான உமிழ்வை வெளியிடுவதில், ஒவ்வொரு ஆண்டும் உலக கப்பல் போக்குவரத்து 3 சதவிகிதம் பங்களிக்கிறது. இந்நிலையில் உமிழ்வை குறைக்கும் நோக்கில் எரிபொருள் இல்லாமல் பயணிக்கும் ஹல்-096 சொகுசு கப்பல் சுற்றுச் சூழலுக்கு நன்மை பயக்கும் விதமாக உள்ளது. இந்த கப்பலின் ஒட்டுமொத்த எடை 14 ஆயிரம் டன் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI