Whatsup Update : தேவையில்லாத அழைப்புகளை மியூட்டில் வைக்கும் வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


வாட்ஸ்-அப் செயலி:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.  அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில் தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


புதிய அப்டேட்


வாட்ஸ் அப்பில் தெரியாத நபர்கள் அழைப்பு வருவது என்பது அனைவருக்கும் நடக்கக் கூடிய ஒன்று.  தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்பு வருவதை தடுக்கும் விதமான வாட்ஸ் அப் புதிய அப்டேட்டை விரைவில் வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதற்கான அப்டேட் என்னவென்றால், தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்பு வந்தால் அதனை மியூட் செய்வதற்கான வசதி புதிய அப்டேட்டாக வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


பயனர்களின் வசதிக்கு ஏதுவாகவும் ஸ்பேம் (spam) கால்களை தவிர்க்கவும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெரியாத அழைப்பு எண்களை மியூட் செய்தால் அந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வராது. ஆனால் அவர்கள் அழைப்பு விடுக்கும் அறிவிப்புகள், வாட்ஸ் அப் கால் அழைப்பு பட்டியலில் தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, ஒரு தனிநபர் அல்லது குழு chat-ஐ எட்டு மணி நேரம், ஒரு வாரம், ஒரு வருடம் மியூட் செய்யலாம் என்ற வசதி இருக்கிறது. இதில் ஒரு வருடம் என்பதற்கு பதிலாக always என்ற option-னும் உள்ளது.  chat-க்கு மட்டும் மியூட் (mute) வசதி இருந்து வந்த நிலையில், தற்போது அழைப்புகளுக்கு இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


அண்மையில் வழங்கப்பட்ட அப்டேட்கள்:


ஆண்ட்ராய்ட் பயனாளர்களை போன்று பிக்சர் - இன் - பிக்சர் மோட் ஆப்ஷன் ஆப்பிள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆப்பிள் பயனாளர்களும் இனி வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் பேசிக்கொண்டே, மற்ற செயலிகளையும் வழக்கம்போல் பயன்படுத்தலாம். அதோடு, புகைப்படங்களில் தரத்தை மாற்றும் ஆப்பிள் பயனாளர்களுக்கான புதிய வசதியையும் மெட்டா நிறூவனம் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI