ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல நிறுவனமான வோல்வோ, அதன் மின்சார கார்களை இந்தயாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் XC40 ரீசார்ஜ் மற்றும் C40 ரீசார்ஜ் போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு அதன் மற்றொரு மின்சார வாகனமாக EX30 மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சோதனை இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
EX30 காரின் வடிவமைப்பு
வோல்வோ EX30, அந்நிறுவனத்தின் மற்றொரு மாடலான வோல்வோ EX90 எஸ்யூவியில் இருந்து பெறுகிறது. நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்டுகள், வோல்வோவின் சிக்னேச்சர் கையொப்பமான 'Thor's Hammer' எல்இடி டிஆர்எல்-கள், பிக்செல் வடிவிலான பின்புற லைட்டுகள்(இது சமீபத்தில் வெளியான ES90 செடானில் உள்ளது) போன்ற வெளிப்புற சிறப்பம்சங்களை இந்த கார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
உட்புற வடிவமைப்பு
EX30 காரின் உட்புறத்தில், வோல்வோ EX30 சர்வதேச மாடல்களில் உள்ள அதே வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில், செங்குத்தாக பொருத்தப்பட்ட 12.3 இன்ச் டச் ஸ்கிரீனும், அதில் புதுப்பிக்கப்பட்ட கூகுள் இன்ஃபோடெயின்மென்ட் OS-ம் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணக்கமானது.
EX30 காரின் பவர்ட்ரெய்ன்
இந்த கார், நிறுவனத்தின் சஸ்டெயினபிள் எக்ஸ்பீரியன்ஸ் ஆக்கிடெக்ச்சர் தளத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த காரின் சர்வதேச மாடல்கள் 2 பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெற்றிருந்தாலும், இந்தியாவில் 69 kWh NMC(நிக்கர்-மாங்கனீசு-கோபால்ட்) பேட்டரி பேக்கை கொண்டிருக்கும். இந்த மாடல், ஒன்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் AWD(All Wheel Drive) வேரியண்ட்டுகளுடன் வழங்கப்பட உள்ளது.
இந்த பேட்டரி யூனிட், 427 bhp பவர், ஒரு முறை சார்ஜ் செய்தால் 474 கிலோ மீட்டர் வரையிலான பயண ரேஞ்சை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அறிமுக விலை
இந்த வால்வோ EX30 மிகச்சிறிய மற்றும் மலிவு விலை மின்சார எஸ்யூவி-யாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதோடு, சர்வதேச சந்தைகளில் வோல்வோவின் மற்ற மாடல்களான EX40 மற்றும் EC40 ஆகியவற்றுக்கு கீழ் இது வைக்கப்பட்டுள்ளது.
இந்த EX30 மின்சார காரை உள்ளூரிலேயே அசெம்பிள், செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நிறுவனம் மதிப்பீடு செய்து வருவதாகவும், அப்போது இது மலிவு விலையில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த காரின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், இதன் அறிமுக விலை 42 முதல் 45 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட வோல்வோ கார்கள் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த காரும் அந்த வரிசையில் சேரும் என அந்நிறுவனம் எதிர்பார்ப்பில் உள்ளது. காரின் விலையை இன்னும் குறைக்க முடிந்தால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.
Car loan Information:
Calculate Car Loan EMI