Volkswagen Sept Discount: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில், முக்கிய கார் மாடல்களின் மீது லட்சங்களில் விலை தள்ளுபடிகளை வழங்கியுள்ளது.
ஃபோக்ஸ்வாகன் கார்களுக்கான விலை தள்ளுபடி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில், விர்டஸ், டைகன், டிகுவான் ஆர் - லைன் மற்றும் டெய்ரோன் ஆகிய மாடல்கள் மீது சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக ரூ.1.5 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பலன்கள் என்பது மாடல், வேரியண்ட், உற்பத்தி ஆண்டு ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். சலுகைகளில் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்க்ரேப்பேஜ் போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும்.
ஃபோக்ஸ்வாகன் - எந்த காருக்கு எவ்வளவு சலுகை?
1. டிகுவான் ஆர் -லைன் - ரூ.6 லட்சம் வரை தள்ளுபடி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ப்ராண்டின் முதன்மையான கார்களில் ஒன்றான டிகுவான் ஆர்-லைனிற்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.3.5 லட்சம் பணத்தள்ளுபடி, ரூ.2 லட்சம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.50 ஆயிரம் லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும். ஸ்க்ரேப்பேஜை தேர்வு செய்யும் பயனர்களுக்கு எக்சேஞ்ச் போனஸான ரூ.2 லட்சத்திற்கு மாற்றாக ரூ.20 ஆயிரம் பலன் கிடைக்கும். ஒரே ஒரு வேரியண்டில் கிடைக்கும் இந்த காரின் எக்ஸ் - ஷோரூம் விலையானது ரூ.47.11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செயல்திறனுக்கு பெயர்பெற்ற இந்த காரானது பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதன் விலை ரூ.47.74 லட்சத்தில் தொடங்கி ரூ.47.74 லட்சம் வரை நீள்கிறது.
2. டைகன் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி
ஃபோக்ஸ்வாகன் நிறுவனமானது பழைய மாடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல் என டைகன் மாடல் மீது இரண்டு வகையான சலுகைகளை அறிவித்துள்ளது. 2025ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பழைய மாடல்கள் மீது ரூ.2 லட்சம் பணத்தள்ளுபடி, ரூ.1 லட்சம் மதிப்பிலான விற்பனை ஆதரவு வழங்கப்படுகிறது. அதேநேரம், 2026ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் மீது ரூ.1 லட்சம் வரையிலான ரொக்கத்தள்ளுபடி, ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.20 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் போனஸ் மற்றும் ரூ.20 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.
அதேநேரம், மேம்படுத்தப்பட்ட டைகனில் வேரியண்டை பொறுத்து ரூ.25 ஆயிரம் வரை ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜிடி லைன் வேரியண்ட்டிற்கு ரூ. 20,000, டாப்லைன் ஏடி மற்றும் ஜிடி ப்ளஸ் டிஎஸ்ஜி ஸ்போர்ட் வேரியண்ட்டுகளுக்கு ரூ. 25,000 தள்ளுபடி கிடைக்கிறது. தகுதியான வேரியண்ட்டுகளுக்கு ரூ. 30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ. 20,000 ஸ்கிராப்பேஜ் பலன் மற்றும் ரூ. 20,000 லாயல்டி பலனும் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.10.99 லட்சத்தில் தொடங்கி ரூ.19.30 லட்சம் வரை நீள்கிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
3. விர்டஸ் - ரூ.1.55 லட்சம் வரை தள்ளுபடி
விர்டஸ் மாடலுக்கும் வேரியண்ட் மற்றும் உற்பத்தி ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில் வித்தியாசமான சலுகைகளை ஃபோக்ஸ்வாகன் அறிவித்துள்ளது. 2025ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார் மாடலுக்கு ரூ.75 ஆயிரமும், 2026ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாடலுக்கு ரூ.50 ஆயிரமும் பணப்பலன் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பயனர்களுக்கு ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது ரூ.20 ஆயிரம் ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் லாயல்டி போனஸும் வழங்கப்படுகிறது.
கடந்த 2025ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட விர்டஸ் டாப்லைன் MT மற்றும் AT மாடல்களில் அதிகபட்ச பலன்கள் கிடைக்கின்றன. இவற்றுக்கு ரூ.75,000 ரொக்கத் தள்ளுபடி, ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.50,000 லாயல்டி போனஸ் என மொத்தமாக ரூ.1.55 லட்சம் கிடைக்கிறது. MY2026 Topline வேரியண்ட்டுகளுக்கு ரூ.50,000 ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸ் உடன் இணைக்கும்போது, அதிகபட்சமாக ரூ.1.30 லட்சம் வரை பலன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10.71 லட்சத்தில் தொடங்கி ரூ.19.20 லட்சம் வரை நீள்கிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
4. டெய்ரோன் - ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி
ஆர்-லைன் மற்றும் லைஃப் வேரியண்ட்களில் கிடைக்கும் டொய்ரோன் மாடல் மீது, செப்டம்பரில் ரூ.1.5 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேரடி பணப்பலன் ஏதும் இதற்கு இல்லை. மாறாக ரூ.1 லட்சம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.1 லட்சம் லாயல்டி போனஸ் பெறுகிறது. எக்ஸ்சேஞ்ச் போனஸிற்கு மாற்றாக ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஸ்க்ரேப்பேஜ் போனஸும் கிடைக்கிறது. இதன் விலை ரூ.47.74 லட்சத்தில் தொடங்கி ரூ.47.74 லட்சம் வரை நீள்கிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI