மேலும் அறிய

Volkswagen Tayron: யானை விலையில் டெய்ரோன் - கட்டுப்படி ஆகுமா? லோ பட்ஜெட்டில் ஸ்கோடா, ஃபார்ட்சுனர் மிரட்டல்

Volkswagen Tayron Vs Competitors: ஃபோக்ஸ்வாகனின் புதிய டெய்ரோன் ஆர்-லைன் கார் மாடலின் விலையானது, அதன் பிரதான போட்டியாளர்களுடன் எப்படி உள்ளது என இந்த தொகுப்பில் அறியலாம்.

Volkswagen Tayron Vs Competitors: ஃபோக்ஸ்வாகனின் புதிய டெய்ரோன் ஆர்-லைன் கார் மாடலின் விலையானது, இந்திய சந்தையில் ரூ.46.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வாகன் டெய்ரோன் Vs போட்டியாளர்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன், ஃபோக்ஸ்வாகன் ப்ராண்டின் முதன்மையான கார் மாடலாக டெய்ரோன் ஆர்-லைன் எஸ்யுவி அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட்ட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே ரூ.51 ஆயிரம் என்ற டோக்கன் தொகையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விலையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  7 சீட்டர் எஸ்ய்வி ஆனது அதன் நேரடி போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்கிறது? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். உள்நாட்டு சந்தையில் ஸ்கோடா கோடியாக் மற்றும் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டொயோட்டா ஃபார்ட்சுனர் ஆகியவற்றுடன் ரெய்ரோன் ஆர்-லைன் போட்டியிடுகிறது. இதுபோக ஜீப் மெரிடியன், எம்ஜி க்ளோஸ்டர் ஆகிய மாடல்களும் போட்டியாளர் பட்டியலில் உள்ளன.

டெய்ரோன் Vs போட்டியாளர்கள் - விலை விவரங்கள்

டெய்ரோன் ஆல் - லைன் கார் மாடலின் விலையானது ரூ.46.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த காருக்கான பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்ட ஸ்கோடாவின் கோடியாக் ஆனது வெறும் ரூ.39.99 லட்சத்தில் கிடைக்கிறது. காரணம் ஃபோக்ஸ்வாகம் நிறுவனமானது தனது மாடலில் எந்தவித சமரசமும் இன்றி ப்ரீமியம் அம்சங்களை அள்ளி தெளித்துள்ளது. இதனிடையே,  பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஃபார்ட்சுனரின் தொடக்க விலையே ரூ.34.16 லட்சம் மட்டுமே ஆகும். அதிகபட்ச விலை ரூ.49.59 லட்சம் வரை நீள்கிறது. 

கார் மாடல் தொடக்க விலை (எக்ஸ் - ஷோரூம்) டெய்ரோனுடன் விலை வித்தியாசம்
டெய்ரோன் ஆர்-லைன் ரூ.46.99 லட்சம் -
ஸ்கோடா கோடியாக் ரூ.39.99 லட்சம் ரூ.7 லட்சம்
ஜீப் மெரிடியன் ரூ.27.69 லட்சம் சுமார் ரூ.20 லட்சம்
டொயோட்டா ஃபார்ட்சுனர் ரூ.34.16 லட்சம் ரூ.12.8 லட்சம்
எம்ஜி க்ளோஸ்டர் ரூ.38.33 லட்சம் ரூ.8.6 லட்சம்


Volkswagen Tayron: யானை விலையில் டெய்ரோன் - கட்டுப்படி ஆகுமா? லோ பட்ஜெட்டில் ஸ்கோடா, ஃபார்ட்சுனர் மிரட்டல்

டெய்ரோன் Vs போட்டியாளர்கள் - இன்ஜின் விவரங்கள்

டெய்ரோன் மற்றும் கோடியாக்கில் 204bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. அதேநேரம், ஃபார்ட்சுனர் எஸ்யுவி ஆனது 2.7 லிட்டர் நேட்சுரலில் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் மூலம் 204bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இதுபோக இந்த பிரிவில் டீசல் ஆப்ஷனை கொண்ட ஒரே காராகவும் திகழ்கிறது. அதன்படி, 204bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.8 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனானது, அதிகப்படியான மைலேஜை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஃபார்ட்சுனரை பிரதான தேர்வாக மாற்றுகிறது.

டெய்ரோன் Vs போட்டியாளர்கள் - வடிவமைப்பு விவரங்கள்

கார் மாடல் நீளம் உயரம் அகலம்  வீல்பேஸ்
ஃபோக்ஸ்வாகன் டெய்ரோன் 4792 மிமீ 1,665 மிமீ 1,866 மிமீ 2785 மிமீ
ஸ்கோடா கோடியாக் 4758 மிமீ 1,679 மிமீ 1,864 மிமீ 2791 மிமீ
டொயோட்டா ஃபார்ட்சுனர் 4795 மிமீ 1,835 மிமீ 1,855 மிமீ 2745 மிமீ

 


Volkswagen Tayron: யானை விலையில் டெய்ரோன் - கட்டுப்படி ஆகுமா? லோ பட்ஜெட்டில் ஸ்கோடா, ஃபார்ட்சுனர் மிரட்டல்டெய்ரோன் Vs போட்டியாளர்கள் - எது பெஸ்ட்?

3 வரிசை இருக்கைகளை கொண்ட ப்ரீமியம் எஸ்யுவி ஆன டெய்ரோன்  ஆர்-லைன் காரானது, வழங்கப்பட்டுள்ள ஸ்போர்டி லுக் மற்றும் அம்சங்களுக்கு நிகராக விலையை கொண்டுள்ளது.  பிரீமியம் அம்சங்களை கருத்தில் கொண்டால் இதற்கு நெருக்கமான போட்டியாளராக கோடியாக் உள்ளது. அதேநேரம், ஃபார்ட்சுனரானது பழைய பாணியிலான வலுவான எஸ்யுவி ஆக உள்ளது. இதில் அதிகப்படியான அம்சங்கள் மற்றும் செயல்திறன் இல்லாவிட்டாலும், வலுவான ஆஃப்-ரோட் செயல்பாடு மற்றும் நம்பகமான ப்ராண்ய் வேல்யூவை கொண்டுள்ளது.


Volkswagen Tayron: யானை விலையில் டெய்ரோன் - கட்டுப்படி ஆகுமா? லோ பட்ஜெட்டில் ஸ்கோடா, ஃபார்ட்சுனர் மிரட்டல்

டெய்ரோன் ஆர்-லைனில் உள்ள அம்சங்கள்:

உள்ளூரிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆர்-லைன் ப்ரீமியம் வேரியண்டாக டெய்ரோன் கார் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.3 விநாடிகளில் எட்டுவதோடு, அதிகபட்சமாக மணிக்கு 224 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க வல்லது.  காரை ப்ரீமியமாக மாற்ற உட்புறத்தில் 15 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல்  வழங்கப்பட்டுள்ளது.

ட்ரைவிங் டேட்டாவை விண்ட்ஷீல்டில் பிரதிபலிக்கும் விதமாக ஆகுமெண்டட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்பிளே, பனோரமிக் க்ளாஸ் சன்ரூஃப், 30 வண்ணங்களிலான ஆம்பியண்ட் லைட்டிங் ஆகியவை இடம்பெற்றுள்ளது. பாதுகாபிற்காக 9 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் அக்செண்ட் மற்றும் டிஸ்செண்ட்  அசிஸ்ட் சிஸ்டம், 14 பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS தொழில்நுட்பம் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
இந்த பட்ஜெட்டில் இவ்ளோ மைலேஜா? அசத்தல் Yamaha Fascino 125 விலை எவ்ளோ?
Yamaha XSR155: இளசுகளுக்கு ஏத்த பைக் இதுதான்யா.! புது கலரில் அசத்தலாக அறிமுகமான யமஹா XSR155; அம்சங்கள் என்ன.?
இளசுகளுக்கு ஏத்த பைக் இதுதான்யா.! புது கலரில் அசத்தலாக அறிமுகமான யமஹா XSR155; அம்சங்கள் என்ன.?
Hero Destini 110 performance: செயல்திறன், வேகம், பிரேக்கிங்; ஹீரோ டெஸ்டினி 100 ஸ்கூட்டர் எப்படி.? டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
செயல்திறன், வேகம், பிரேக்கிங்; ஹீரோ டெஸ்டினி 100 ஸ்கூட்டர் எப்படி.? டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
KTM 390 Duke Rival: கேடிம் ட்யூக் போரடிக்குதா? லைட் வெயிட், லோ காஸ்டில் மிரட்டும் 5 அட்வென்சர் பைக்குகள்
KTM 390 Duke Rival: கேடிம் ட்யூக் போரடிக்குதா? லைட் வெயிட், லோ காஸ்டில் மிரட்டும் 5 அட்வென்சர் பைக்குகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget