ஃபோக்ஸ்வேகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட்  இப்போது முன்பை விட அதிக ஸ்டைலாகவும், பார்த்தவுடனேயே சுண்டி இழுக்கும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்க வடிவமைப்பை நிறுவனம் முழுமையாகப் புதுப்பித்துள்ளது. இதன் மூலம், டைகன் தனது உருவத்தில் இன்னும் கம்பீரமாகத் தெரிகிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை காணலாம். 

Continues below advertisement

உட்புற வசதிகள் மற்றும் டெக்னாலஜி

டைகனின் உட்புறம் தேவையற்ற ஆடம்பரங்கள் இன்றி, மிகவும் நேர்த்தியான மற்றும் பிரீமியம் உணர்வைத் தருகிறது. இதில் அத்தியாவசியமான வசதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இதில் உள்ள புதிய டச் ஸ்கிரீன் சிஸ்டம் முன்பை விட மிக வேகமாகவும், துல்லியமாகவும் செயல்படுகிறது.

கூடுதலாக, இதில் சேர்க்கப்பட்டுள்ள AI உதவியாளர் (AI Assistant) ஓட்டுநரின் வேலையை இன்னும் எளிதாக்குகிறது. டிஜிட்டல் மீட்டர் கிளஸ்டர் பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், வாகனம் ஓட்டும்போது தேவையான தகவல்களைத் தெளிவாகக் காட்டுகிறது. பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான இருக்கைகள் (Ventilated Seats) மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏசி போன்ற அம்சங்கள் பயணத்தை இன்னும் சொகுசாக்குகின்றன.

இன்ஜின் மற்றும் பெர்ஃபார்மன்ஸ்

ஃபோக்ஸ்வேகன் என்றாலே அதன் டிரைவிங் அனுபவத்திற்குப் பெயர் பெற்றதுதான். அது இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் அப்படியே தொடர்கிறது. இதன் 1.0 TSI இன்ஜின் இப்போது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகிறது. இது நகரப் போக்குவரத்தில் காரை மிகவும் மென்மையாகவும், சிக்கனமாகவும் ஓட்ட உதவுகிறது.

அதிவேகத்தையும் அதிக சக்தியையும் விரும்புபவர்களுக்கு 1.5 TSI இன்ஜின் ஒரு வரப்பிரசாதம். இது நெடுஞ்சாலைகளில் மின்னல் வேக முடுக்கத்தையும், சிறந்த செயல்திறனையும் வழங்குகிறது. காரின் ஸ்டீயரிங் கையாளுதல் மிகவும் துல்லியமாக இருப்பதால், வளைவுகளில் திருப்புவது ஒரு தனி சுகம். இருப்பினும், இதன் சஸ்பென்ஷன் சற்று கடினமாக (Stiff) இருப்பதால், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் லேசான அதிர்வுகளை உணர முடிகிறது.

இதில் மிஸ்ஸிங் என்ன?

இன்றைய நவீன எஸ்யூவி-களில் (SUV) எதிர்பார்க்கப்படும் சில முக்கிய வசதிகள் இதில் விடுபட்டுள்ளது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது.360-டிகிரி கேமரா, ADAS பாதுகாப்பு வசதி மற்றும் பவர் டெயில்கேட் போன்றவை இதில் இல்லை.காரின் பின்புற கேமரா (Rear Camera) தரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.இன்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை டீசல், சிஎன்ஜி அல்லது ஹைப்ரிட் மாடல்கள் இல்லாதது சில வாடிக்கையாளர்களுக்கு குறையாகத் தெரியலாம்.பின்புற இருக்கை வசதி போதுமானதாக இருந்தாலும், மற்ற சில போட்டி நிறுவனங்களின் எஸ்யூவி-களுடன் ஒப்பிடும்போது இடம் சற்றுக் குறைவாகவே தெரிகிறது.

மொத்தத்தில், சில டெக்னாலஜி வசதிகள் குறைந்தாலும், ஓட்டுநர் அனுபவத்திலும் உறுதியிலும் இந்த டைகன் ஃபேஸ்லிஃப்ட் இப்போதும் ஒரு 'கிங்' தான்!

Car loan Information:

Calculate Car Loan EMI