உலகின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று வோக்ஸ்வேகன். இந்தியாவிலும் மிகவும் பிரபலமான கார் நிறுவனமாக வோக்ஸ்வேகன் உள்ளது. இந்த நிறுவனத்தின் மின்சார கார் இதுவரை இந்தியாவில் அறிமுகமாகவில்லை.

Continues below advertisement

ID Cross மின்சார கார்:

அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் Volkswagen விரைவில் தங்களது மின்சார காரான  ID Cross-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது என்ற தகவல் வெளியானது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது. 

மைலேஜ்:

இந்த கார் 2 வேரியண்ட்களில் அறிமுகமாக உள்ளது. ஒரு வேரியண்டில் 37 கிலோவாட் பேட்டரி மற்றும் மற்றொரு வேரியண்டில் 52 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  116 எச்பி குதிரை ஆற்றல் 37 கிலோவாட் பேட்டரிக்கும், 135 எச்பி குதிரை ஆற்றல் 52 கிலோவாட் பேட்டரிக்கும் திறன் கொண்டது.100 கிலோமீட்டர் வேகத்தை 9.8 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக, 52 கிலோவாட் பேட்டரி 100 கிலோமீட்டர் 7.1 நொடிகளில் எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மைலேஜிம் சிறந்த வகையிலே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 37 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 317 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 52 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 427 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. டிசி சார்ஜில் 37 கிலோவாட் பேட்டரியை 23 நிமிடங்களிலும், 52 கிலோவாட் பேட்டரியை 24 நிமிடங்களிலும் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

விலை:

இந்த காரின் விலை ரூபாய் 30.77 லட்சம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. வோக்ஸ்வேகனின் புகழ்பெற்ற ஐடி போலோ காரை மாற்றி வடிவமைத்தே இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.  எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 18 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த காரின் நீளம் 4 ஆயிரத்து 153 மி.மீட்டர், அகலம் 1794 மி.மீட்டர், உயரம் 1581 மி.மீட்டர் ஆகும். 

12.9 இன்ச் டச் ஸ்கிரின் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டிக்கி வசதி 475 லிட்டர் ஆகும். 360 டிகிரி கேமரா வசதி, அடாஸ் வசதி, ஆட்டோ பார்க் அசிஸ்ட், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி உள்ளது. 

வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்கள் அதன் தரத்திற்காக உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டால் நல்ல வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது. ஆனால், இதன் விலை அதிகமாக இருப்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று தயக்கம் காட்டியுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI