Volkswagen Tiguan R Line: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோல்க்ஸ்வாகன் நிறுவனத்தின் டிகுவான் ஆர் லைன் கார் மாடல் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஃபோல்க்ஸ்வாகன் டிகுவான் ஆர் லைன் - சலுகைகள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதத்தில் மலிவு விலை மட்டுமின்றி, ப்ரீமியம் மற்றும் எஸ்யுவி கார்களுக்கும் ஏராளமான சலுகைகளை உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இதில் மிகப்பெரிய சலுகை பெற்ற கார் மாடலாக ஃபோல்க்ஸ்வாகனனின் டிகுவான் ஆர் லைன் கார் மாடல் உள்ளது. அதாவது சுமார் 3 லட்சம் ரூபாய் வரை இந்த காரின் விலையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்று மாதங்களுக்கு முன்பு தான், ரூ.49 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) என்ற விலையில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் மூலம் அந்த காரின் விலை ரூ.46 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளானது பணத்தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்ரேட் பலன்கள் ஆகிய வடிவில் வழங்கப்படுகின்றன.

விலை குறைப்பு நடவடிக்கை ஏன்?

இந்த காரானது உள்நாட்டு சந்தையில் BMW X1, ஆடி Q3, மெர்சிடஸ் பென்ஸ் GLA ஆகிய கார்களுடன் பிரதனமாக போட்டியிடுகிறது. ப்ரீமியம் கார்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும், அதிகப்படியான விலை நிர்ணயம் காரணமாக டிகுவானின் ஆர் லைன் எதிர்பார்த்த விற்பனையை பதிவு செய்ய முடியவில்லை. முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், அதிகப்படியான வரியை எதிர்கொண்டு, சென்னையில் அதன் ஆன் - ரோட் விலை 61 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்நிலையில் தான், ரூ.3 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிகுவான் ஆர் லைன் - இன்ஜின் விவரங்கள்:

டிகுவான் ஆல் லைன் கார் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 204bhp மற்றும் 320Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மூலம், இந்த காரில் ஆல் வீல் ட்ரைவ் அம்சம் மூலம் நான்கு வீல்களுக்கும் இந்த காரில் ஆற்றல் பகிரப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மிஒஇட்டர் வேகத்தை வெறும் 7.1 விநாடிகளில் எட்டும் என ஃபோல்க்ஸ்வாகன் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 229 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த கார், லிட்டருக்கு 12.58 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

டிகுவான் ஆர் லைன் - உட்புற அம்சங்கள்:

டிகுவாப் ஆர் லைன் எஸ்யுவியில் ஆல் பிளாக் கேபின் வழங்கப்பட்டு இருந்தாலும், இருக்கை மற்றும் டேஷ்போர்ட்டில் நீள நிற டச் வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்பிளே அம்சங்களை கொண்ட 15 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. "R" பேட்ஸ் கொண்ட 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் இடம்பெற்றுள்ளது. அதற்கு பின்புறமாக 10.3 இன்ச் முற்றிலுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது. 

அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒற்றை வேரியண்டாக கிடைக்கும் ஆர் லைனில், இரண்டு போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங், மசாஜிங் ஃப்ரண்ட் சீட்ஸ், 3 ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 30-கலர் ஆம்பியண்ட் லைட்டிங், லெவல் 2 ADAS, பல ஏர்பேக்குகள், ஃபோல்க்ஸ்வாகன் பார்க் அசிஸ்ட் ப்ளஸ் டெக் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

டிகுவான் ஆர் லைன் - வெளிப்புற அம்சங்கள்:

ஃபோல்க்ஸ்வாகனின் இந்த ப்ரீமியம் எஸ்யுவி ஆனது வெளிப்புறத்தில் 6 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதில் ஓய்ஸ்டர் சில்வர் மெடாலிக், க்ரெனடில்லா பிளாக் மெடாலிக், சிப்ரெஸ்ஸினோ க்ரீன் மெடாலிக், ஓரிக்ஸ் ஒயிட் மதர் ஆஃப் பியர்ல் எஃபெக்ட், நைட்ஷேட் ப்ளூ மெடாலிக் மற்றும் பெர்சிமன் ரெட் மெடாலிக் ஆகிய வண்ண விருப்பங்கள் அடங்கும். இதுபோக கனெக்டட் எல்இடி ஸ்ட்ரிப்களுடன் கூடிய ஸ்லீக்கர் முகப்பு விளக்குகள், சில்வர் லிப்புடன் கூடிய பெரிய ஏர் டேம்,19 இன்ச் அலாய் வீல்கள், ஸ்மோக்ட் எஃபெக்ட் கொண்ட பெரிய லைட் பார் மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் ஆகிய வெளிப்புற அம்சங்களை கொண்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI