Vinfast VF MPV 7 Vs Rivals: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF MPV 7 மின்சார காரானது, உள்ளூர் சந்தையில் கியா காரென்ஸ் க்ளாவிஸ் மற்றும் BYD eMax 7 கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

வந்தாச்சு வின்ஃபாஸ்டின் VF MPV 7 

இந்திய சந்தையில் VF6 மற்றும் VF7 வாகனங்களை தொடர்ந்து தனது மூன்றாவது மின்சார காராகவும், முதல் 7 சீட்டர் எம்பிவி ஆகவும் VF MPV 7 மாடலை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒற்றை வேரியண்டில் ஏராளமான அம்சங்களை கொண்டு விற்பனைக்கு வந்துள்ள இந்த காரின் விலை 24 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது கியா காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷன் மற்றும் BYD eMax 7 ஆகிய, மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட மின்சார எம்பிவி மாடல்களுடன் போட்டியிடுகிறது. இந்த இரண்டு போட்டியாளர்களின் சவாலையும் வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்டின் புதிய VF MPV 7 கார் எப்படி எதிர்கொள்கிறது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

VF MPV 7 Vs காரென்ஸ் க்ளாவிஸ் Vs eMax 7 - அளவீடுகள்

அளவீடுகள் அடிப்படையில் அத்தனை பிரிவுகளிலும் தனது போட்டியாளர்களை காட்டிலும் VF MPV 7 பெரியதாக உள்ளது.

அளவீடுகள்VF MPV 7காரென்ஸ் க்ளாவிஸ் eMax 7
நீளம் (மி.மீ.,)4,7404,5504,710
அகலம் (மி.மீ.,)1,8721,8001,810
உயரம் (மி.மீ.,)1,7341,7301,690
வீல்பேஸ் (மி.மீ.,)2,8402,7802,800
வீல் சைஸ் (மி.மீ.,)191717

காரென்ஸ் க்ளாவிஸ் மாடலை காட்டிலும் 190 மில்லி மீட்டர் நீளம், 72 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 60 மில்லி மீட்டர் கூடுதல் வீல்பேஸை வின்ஃபாஸ்டின் புதிய 7 சீட்டர் கொண்டுள்ளது. உயரம் மட்டும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளது. அதேநேரம், eMax 7 மாடலுடன் ஒப்பிட்டால் 30 மில்லி மீட்டர் கூடுதல் நீளம், 62 மில்லி மீட்டர் கூடுதல் அகலம், 44 மில்லி மீட்டர் கூடுதல் உயரம் மற்றும் 40 மில்லி மீட்டர் கூடுதல் வீல்பேஸை கொண்டுள்ளது. மற்ற இரண்டு மாடல்கள் 17 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்க, வின்ஃபாஸ்ட் மாடலானது 19 இன்ச் அலாய்வீல்களை பெற்றுள்ளது.

VF MPV 7 Vs காரென்ஸ் க்ளாவிஸ் Vs eMax 7 - பவர்ட்ரெயின்

அம்சங்கள்VF MPV 7காரென்ஸ் க்ளாவிஸ்eMax 7
பேட்டரி பேக் (KWh)60.1342|51.455.4|71.8
மோட்டார்கள்11|11|1
பவர் (hp)204135|171163|204
டார்க் (Nm)280255|255310|310
க்ளெய்ம்ட் ரேஞ்ச்517 கிமீ (ARAI)404|490420|530
ட்ரைவ்ட்ரெயின்FWDFWDFWD

வின்ஃபாஸ்டின் 7 சீட்டர் ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷனை மட்டுமே கொண்டிருக்க, அதன் போட்டியாளர்கள் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், eMax 7 பெரிய பேட்டரி ஆப்ஷனை கொண்டு அதிகபட்சமாக 530 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

VF MPV 7 Vs காரென்ஸ் க்ளாவிஸ் Vs eMax 7 - விலை

மாடல்VF MPV 7காரென்ஸ் க்ளாவிஸ்eMax 7
விலைரூ.24.49 லட்சம்ரூ.17.99 - ரூ.24.99 லட்சம்ரூ.26.90 - 29.90 லட்சம்

கியா காரென்ஸ் க்ளாவிஸின் டாப் எண்ட் வேரியண்டை காட்டிலும் VF MPV 7 மாடலின் தொடக்க விலை 50 ஆயிரம் ரூபாய் மலிவாக உள்ளது. அதேநேரம், இந்த பட்டியலில் மிகவும் விலையுயர்ந்த மாடலாக eMax 7 உள்ளது.  இந்த காரின் அடிப்படை தொடக்க விலையே வின்ஃபாஸ்ட் மாடலை காட்டிலும் 2 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அதிகமாகும். வெளியாகியுள்ள விவரங்கள் அடிப்படையில்,  காரண்ச் க்ளாவிஸின் அம்சங்கள், BYD eMax 7-ஐ விட மலிவான விலை அடிப்படையில் VF MPV 7 ஒரு வலுவான நடுத்தரப் போட்டியாளராக திகழ்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI