Vinfast New 7 Seater Electric SUV: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் மின்சார எஸ்யுவி, சுமார் 594 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்குமாம். 

Continues below advertisement

ஃபாரின் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி:

வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்திய சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளூர் சந்தைக்காக VF 8 மற்றும் VF9 எலக்ட்ரிக் எஸ்யுக்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமையை பெற்றுள்ளது. குறிப்பாக VF9 மாடலானது சர்வதேச சந்தை அளவில் ப்ராண்ட் சார்பில் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய கார் மாடலாகும். 6 மற்றும் 7 சீட்டர் கான்ஃபிகரேஷனில் இந்த மாடல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைக்கு உள்ளூரில் எப்போது களமிறக்கப்படும் என்ற தகவல் இல்லாவிட்டாலும், காப்புரிமை பெற்றுள்ளதால் விரைவில் சந்தைப்படுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

வின்ஃபாஸ்ட் VF9 -பேட்டரி, ரேஞ்ச், சார்ஜிங்:

சர்வதேச சந்தையில் வின்ஃபாஸ்ட் VF9 மின்சார எஸ்யுவி, ஈகோ மற்றும் ப்ளஸ் ட்ரிம்களில் கிடைக்கிறது. இதில் 123kW பேட்டரி பேக், இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இரண்டு வேரியண்ட்களும் அதிகபட்சமாக 402bhp பவரையும் 620Nm டார்க்கையும் வழங்குகின்றன. ஈகோ ட்ரிம் 594 கிலோ மீட்டர் வரையிலும், ப்ளஸ் வேரியண்ட் 579 கிலோ மீட்டர் வரையிலும் ரேஞ்சை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. ஒரு DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, VF9 காரின் பேட்டரியை 35 நிமிடங்களில் 10 முதல் 70 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இந்த மின்சார வாகனம் 7.7kW மற்றும் 1.4kW கையடக்க சார்ஜிங் வசதிகளுடனும் வருகிறது. பொது சார்ஜிங்கில் பிளக் & சார்ஜ் மற்றும் ஆட்டோ சார்ஜ் செயல்பாடுகள் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

வின்ஃபாஸ்ட் VF9 - அம்சங்கள், வசதிகள்

VF9 எஸ்யுவியில் ஒரு பெரிய 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் பின் இருக்கைப் பயணிகளுக்கான 8 இன்ச் பின்புற டச்ஸ்க்ரீன் உடன் கூடிய எளிமையான டேஷ்போர்ட் இடம்பெற்றுள்ளது. ஈகோ வேரியன்ட் பிரத்தியேகமாக 7 சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது, அதே சமயம் ப்ளஸ் டிரிம் 6 மற்றும் 7 சீட்டர் என இரண்டு வகையிலான கான்ஃபிகரேஷனில் விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற முக்கிய அம்சங்களில் ஒரு பெரிய பனோரமிக் கண்ணாடி சன்ரூஃப், பல வண்ண ஆம்பியன்ட் விளக்குகள், 13 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், மூன்று வரிசைகளிலும் பயணிகளுக்கான பல USB போர்ட்கள், மல்டி-ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பின்புற ஏர் வென்ட்கள், கேபின் காற்றின் தர தொழில்நுட்பம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 12-வழி பவர், சூடாக்கப்பட்ட, காற்றோட்டமான மற்றும் மசாஜ் செய்யும் இருக்கைகள், ஓவர் தி ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்கள், கனெக்டட்-கார் செயல்பாடுகள் மற்றும் பல அடங்கும்.

இதையும் படியுங்கள்: Maruti EV: ரூ.10 லட்சம் பட்ஜெட் - டியாகோவிற்கு போட்டியாக மாருதியின் புதிய EV - ரேஞ்ச், அம்சங்கள், லாஞ்ச்

 

வின்ஃபாஸ்ட் VF9 - வடிவமைப்பு

வியட்நாம் ப்ராண்டின் புதிய 7 சீட்டரின் அளவிடூகளை பொறுத்தவரை, வின்ஃபாஸ்ட் VF9 எஸ்யுவி 5,118 மிமீ நீளம், 2,254 மிமீ அகலம், 1,696 மிமீ உயரம் மற்றும் 3,148 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரானது 181 மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸையும், மூன்றாவது வரிசை இருக்கைகள் மடிக்கப்பட்ட நிலையில் 926 லிட்டர் பூட் ஸ்பேஸையும் வழங்குகிறது. மேலும், இதில் 75 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபப்ரங்க் உள்ளது.

வின்ஃபாஸ்ட் VF9 - விலை, போட்டியாளர்கள்

நடப்பாண்டி இறுதியில் சந்தைப்படுத்தப்பட உள்ள இந்த காரானது, ப்ராண்டின் முதன்மையான மாடலாக நிலைநிறுத்தப்பட்டு சுமார் 65 லட்சம் ரூபாயை தொடக்க விலையாக பெறக்கூடும். உள்ளூரில் இந்த காரானது கியா EV9, ஹுண்டாய் ஐயோனிக் 5 மற்றும் டொயோட்டா ஃபார்ட்சுனர் போன்ற மாடல்களுடன் போட்டியிடக்கூடும்.


Car loan Information:

Calculate Car Loan EMI