வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவிற்கான தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. அது ஒரு எலக்ட்ரிக் எம்பிவி (MPV) என அந்நிறுவனம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. நாங்கள் தலைமைச் செயல் அதிகாரி தபன் கோஷிடம் பேசியபோது, ​​அடுத்ததாக அறிமுகப்படுத்தப்படவிருப்பது ஒரு எலக்ட்ரிக் 7 இருக்கைகள் கொண்ட வாகனம் என்று அவர் கூறினார்.

Continues below advertisement

வின்ஃபாஸ்ட் நிறுவனத்திடம் இதுவரை இரண்டு எஸ்யூவி கார்கள் உள்ளன. ஆனால், இந்த 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி அதன் வரிசையை விரிவுபடுத்தி, மேலும் அதிக விற்பனையை கொண்டுவரும். இந்த லிமோ கிரீன் மாடல், கியா கேரன்ஸ் கிளாவிஸ் ஈவி-க்கு போட்டியாக அமையும்.

நாங்கள் 60kwh பேட்டரி பேக்கையும், சுமார் 450 கி.மீ. தூரம் பயணிக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம். இதன் பவர்டிரெய்ன், 200bhp ஆற்றலை உருவாக்கும் ஒற்றை மின்சார மோட்டாரை கொண்டிருக்கும். இந்த ஆற்றல் 'லிமோ கிரீன்' காருக்குப் போதுமானதாக இருக்கும்.

Continues below advertisement

லிமோ கிரீன்: வடிவமைப்பு, அம்சங்கள், விவரக்குறிப்புகள்

இந்த 7 இருக்கைகள் கொண்ட கார், பல்வேறு வேரியண்ட்டுகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் தற்போதைய வின்ஃபாஸ்ட் கார்களின் விலையை கருத்தில் கொள்ளும்போது, ​​இதன் விலையும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம்.

இது ஒரு MPV ஆக இருந்தாலும், இதன் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாகவும், நன்கு அறியப்பட்ட வின்ஃபாஸ்ட் வடிவமைப்பு பாணியைக் கொண்டும் உள்ளது. ஆனால், தற்போதைய VF7 மற்றும் VF6 மாடல்களிலிருந்து இதில் ஒரு வேறுபாடு இருக்கிறது. லிமோ கிரீன் 4740 மிமீ நீளத்தையும் 2840 மிமீ வீல்பேஸையும் கொண்டுள்ளது.

இந்திய சந்தைக்காக, எதிர்பார்க்கப்படும் அனைத்து அம்சங்களுடன் கூடிய உயர் தரத்திலான உபகரணங்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். வழக்கம் போல், குறைந்தபட்ச பொத்தான்(Button) கட்டுப்பாடுகளுடன் கூடிய தரமான 10.1 அங்குல தொடுதிரை தொடர்கிறது.

லிமோ கிரீன்: சார்ஜிங், செயல்திறன் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை

லிமோ கிரீன் மாடல் 11kW AC சார்ஜிங் வசதியுடன் வரும். மேலும், இது 80kW DC ஃபாஸ்ட்-சார்ஜிங் வசதியுடனும் இணக்கமானது. இந்த கார் 30 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

இந்த லிமோ க்ரீனின் ஆரம்ப விலையாக, சுமார் 16 முதல் 17 லட்சம் ரூபாய் என்ற போட்டித்தன்மை வாய்ந்த விலையையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்போதுதான், சுமார் 19 லம்சம் ரூபாய்க்கு நெருக்கமாக உள்ள கியா கேரன்ஸ் கிளாவிஸ் ஈவி-க்கு, லிமோ க்ரீன் கடுமையான சவாலை அளிக்க முடியும். அறிமுகப்படுத்தும்போது, வின்ஃபாஸ்ட் நிறுவனம் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

 


Car loan Information:

Calculate Car Loan EMI