இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனம் ஹீரோ நிறுவனம். தற்போது இந்தியாவில் இ ஸ்கூட்டர் தயாரிப்பும், விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, முன்னணி நிறுவனமான ஹீரோவின் இ ஸ்கூட்டர் VIDA VX2 ஆகும். இந்த இ ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே விரிவாக காணலாம். 

Continues below advertisement

இந்த VIDA VX2 இ ஸ்கூட்டர் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. இது VX2 Go, VX2 Go மற்றும் VX2 Plus என 3 வேரியண்ட்கள் உள்ளது. 

1. VIDA VX2 Go:

இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 92 ஆயிரத்து 532 ஆகும். 2.2 கிலோவாட் பேட்டரி கொண்டது. இது சார்ஜ் ஆவதற்கு 3.53 மணி நேரம் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 92 கிலோமீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. இது 5 வண்ணங்களில் உள்ளது. கருப்பு, நீலம், சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தை கொண்டது. 

Continues below advertisement

2. VIDA VX2 Go:

இந்த இ ஸ்கூட்டர் ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 620 ஆகும். 3.4 கிலோவாட் பேட்டரியை கொண்டது ஆகும். 26 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 100 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. கருப்பு, நீலம், சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. 

3. VIDA VX2 Plus:

இந்த VIDA VX2 Plus இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 17 ஆயிரத்து 696 ஆகும். மணிக்கு 80 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 142 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 3.4 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டது. இது சார்ஜ் ஏறுவதற்கு 5.39 மணி நேரம் ஆகும். சாம்பல், கருப்பு, ஆரஞ்ச், சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் இந்த இ ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. 

இந்தியாவில் ஓலா, ஏதர் ஆகிய இ ஸ்கூட்டர்கள் விற்பனையில் அசத்தி வந்தாலும் ஹீரோவின் இந்த விடா விஎக்ஸ் இ ஸ்கூட்டரும் பலராலும் கவரப்பட்டு வருகிறது. டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் இ ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.


Car loan Information:

Calculate Car Loan EMI