இந்தியாவின் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்றாக திகழ்வது Vespa நிறுவனத்தின் ஸ்கூட்டர். இவர்களின் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
Vespa ZX 125:
இந்தியாவின் Vespa ZX 125 ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.
இந்தியாவின் Vespa ZX 125 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 775 ஆகும். இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இந்த Vespa ZX 125 ஸ்கூட்டரில் 124.45 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 115 கிலோவாகும்.
மைலேஜ்:
இதன் இருக்கை உயரம் 770 மி.மீட்டர் உயரம் கொண்டது. இதில் 7.4 டேங்கர் உள்ளது. 9.65 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கருப்பு, நீலம் உள்பட 7 வண்ணங்கள் கொண்டது. 10.11 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 45 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 333 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 1 சிலிண்டர், ஏர் கூல்ட், 3 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்க் ப்ரேக் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 10 இன்ச், பின்பக்கம் 10 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஏர்கிராப்ட் டெரிவ்ட் சிங்கிள் சைட் ஆர்ம் ப்ரன்ட் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் எஃபெக்ட் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டு்ள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். 2 லிட்டர் ரிசர்வ்ட் ப்யூல் வசதி உள்ளது.
இந்த வாகனத்திற்கு 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. இதற்கு 4 இலவச சர்வீஸ் அளிக்கப்படுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் அனலோக் ஆகும். ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் அனலோக் வசதியில் உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதிஉள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.
செல்ஃப் ஸ்டார்ட்:
கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் ப்ரேக்/டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அண்டர் சீட் ஸ்டோரஜ் வசதி உள்ளது. ஃப்ரண்ட் ஸ்டோரஜ் பாக்ஸ் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI